பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மொஹெஞ்சொ - தரோ


முன்னோரும் கலந்திருந்த நிலைமையை நன்கு விளக்குவ தாகும்.பிரதி பன்மைப் பெயர்கட்கு ‘ம்’ சேர்க்கப்படல், கொண்டரும் தமிழ் மக்களும் ஒரிடத்தில் வாழ்ந்திருந்தபோது பிராக்ருத மொழி சிதைந்து இன்றுள்ள வட இந்திய மொழிகளாக மாறுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்திருத்தல் வேண்டும்.... திராவிடத்தில் உள்ள பல உயிர் நாடியான சொற்கள் ப்ராஹாயி மொழியில் வியத்தகு முறையில் அமைந்திருக்கின்றன. இத் திராவிடக் கலப்பு-ப்ராஹுயி மக்களோடு கலந்திருந்த பண்டைத் திராவிட வகுப்பாருடையதாகும் என்பது திண்ணம்”.[1]

“வடமொழி, பிராக்ருதம், திராவிடம், இம்மூன்றையும் சோதித்துப் பார்ப்பின், பண்டைக் காலத்தில் திராவிடம் வடஇந்தியாவில் இருந்ததென்பது தெளிவு. என்னை? ‘பாலி’ முதலிய பிராக்ருத மொழிகள் உருபுகளைச் சொற்களின் முற்கூட்டும் வடமொழி முறையை அறவே கைவிட்டு, திராவிட முறைப்படி சொற்களின் பின்னரே உருபுகளைக் கூட்டின. மையால் என்க.[2]

“புதிய கற்கால மக்கள் இந்தியா முழுவதும் திராவிட மொழிகளையே பேசிவந்தனர். விந்திய மலை முதலிய மலைப்பகுதிகளைச் சேர்ந்த இடங்களிற்றாம் ஆஸ்ட்ரேலிய (முண்டா) மொழிகள் பேசப்பட்டன. இன்று வட இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் ஆரியர் வரவுக்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவையே ஆகும். அவை, வடமொழியின் பெருங்கலப்பால் தம் உண்மை வடிவை இழந்துவிட்டன. அவை - வடமொழியையோ பிராக்ருதத்தையோ சேர்ந்தவை அல்ல; அவ் விரண்டின் கூட்டுறவால் உருவம் கெட்டவை.பிராக்ருத மொழிகள் இன்றுள்ள வட இந்திய மொழிகளினின்றும் முற்றும் மாறுபட்டவை.


  1. Dr.Caldwell’s ‘Comparative Grammar of the Dravidian Languages’, pp. 148, 368, 412, 633.
  2. ‘Dravidic Studies`, part III pp. 57, 61.