பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மெளனப் பிள்ளையார் கரனைப்போல் இராத்திரி வேளையில் அந்த ஆடுகூடக் கண் விழித்துக் கொண்டு அடிக்கடி கத்த ஆரம்பித்தது. பாஸ்கரனல் அதைச் சகிக்க முடியவில்லை. அந்தத் தலை வே த னை யு ட ன் அவனுல் எப்படிப் படிக்க முடியும் ? பொறுத்துப் பார்த்தான். மே...ஏ...ஏ...ஏ ' என்று விடாமல் கத்தியது ஆடு. அவளுல் மேற்படி அஜகீதத்தைச் சகிக்கமுடிய வில்லை. எந்த மிருகத்தைப் போலும் கத்துவதில் அவன் தீரனல்லவா ? அவனுக்கு வந்த ஆத்திரத்தில் எரிச்சலுடன் அவனும் 'மே... ஏ...ஏ...ஏ ' என்று கத்தி, ஆட்டுக்கு அழகு காட்டினன். பதிலுக்கு ஆடும் கத்தியது. மறுபடியும் பா ஸ் க ர ன் தொடர்ந்து கத்தினன். இப்படியாக ஆடும் பாஸ்கரனும் மாறி மாறி இரவு பூராவும் அஜகீதம் பாடித் தீர்த்தார்கள். பாட்டி ஒன்றும் பேசாமல் மெளனமாகத் தானகவே சிரித்துக் கொண்டாள். 4 - குழந்தைக்கு அஜகீதத்தில் பிரியம் ஏற்பட்டது. அது அழுகிறபோது ஆடு கத்தினல் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தித் தன் பொக்கை வாயைத் திறந்து சிரிக்கும். ஆடு சில சமயங்களில் கத்தாமற் போளுல் அதற்காக அந்தக் குழந்தை அழுவதும் உண்டு. திடீரென்று ஒருநாள் பாட்டி வளர்த்துவந்த அந்த ஆடு இறந்து விட்டது. தன்னு டைய படிப்புக்குக் குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த அந்த ஆடு செத்துப் போனதில் பாஸ்கரனுக்குப் பரம திருப்தி. ஆனல் இன்னொரு இடைஞ்சல் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பாட்டி பாஸ்கரனிடம் வந்து, 'அப்பா, உனக்குப் புண்ணியம் உண்டு. தாயில்லாக் குழந்தை அழுவதை நிறுத் தில்ை உனக்கு எவ்வளவோ நல்லது. அதோ பார் , ஆடு கத்தவில்லை என்று குழந்தை பிரமாதமாய் அழுகிறது. அந்த ஆடு செத்துப்போன விஷயம் குழந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் இன்னும் அதிகமாய் அழ ஆரம்பித்துவிடும். நீதான் அந்த ஆடு மாதிரியே தத்ரூபமாய்க் கத்துகிருயே.