பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாட்சண்யப் பிரகிருதி ராமநாதன் சென்னையிலிருந்து டில்லிக்கு மாற்றப் பட்டான். அவன் ரெயில்வேயில் மெயில் ஸார்ட்டராக இருந்ததால் அடிக்கடி டில்லிக்கும் சென்னைக்கும் போய்வரச் செளகரியமா யிருந்தது. சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டி யாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லி யிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி, அப்பளக்குழவி முதலிய குடும்ப சாமான் களை அனுப்பி வந்தார்கள். - ராமநாதன் பொறுமைசாலி. இல்லாவிட்டால் பட்ட ணத்திலுள்ள சாமான்களில் முக்கால் வாசியை டில்லியிலும் டில்லியிலுள்ள சாமான்களைப் பட்டணத்திலும் கொண்டு வந்துசேர்ப்பான ?. அத்துடன் அவனுக்கு இரண்டு ஊர் மனுஷ் யர்களும் வேண்டியவிர்கள். தாட்சண்யப்பட்ட மனிதர்கள் சொல்லும்பொழுது எப்படி மாட்டேனென்பது ? அநேக மாக ராமநாதனுக்கு மாதத்தில் நாலேந்து பிரயாணம் கட்டாயம் உண்டு. ஒவ்வொரு பிரயாணத்திலும் அவன் கொண்டு போகும் சாமான்கள் மூன்று குடும்பத்திற்கு ஆகும். - 影 ஒரு தடவை ராமநாதனுக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. அவனுக்குக் கோபம் வந்ததில் தவறென்ன ? ஊரார் சாமான்களை யெல்லாம் கொண்டுபோய் டில்வியில் வைப்பதற்குத்தான அவனுக்கு இந்திய சர்க்கார் சம்பளம் தருகிரு.ர்கள் ? இருந்தாலும் அவன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, பரோபகாரம் இதம் சரீரம் என்று நண்பர்களுக்கு உதவிக்கொண்டிருந்தான். ராமநாதனுடைய குடும்பம் சென்னையில் இருந்தது. டில்லியில் குடித்தனத்தைப் போடலாகாதா என்ருல் அங்கே