பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து வேட்டை - 3}. மாப் புன்னகை புரிந்துவிட்டு, நான் கே. பி. மோஹினி இல்லை . நான் அவருடைய தங்கை ! என்ருள். நாகராஜன் பெரிய ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான். இதற்குள் கிடைக் காரன் நூறு மாம்பழங்களே எண்ணிக்கொண்டு வந்து காரில் வைத்து மீதிச் சில்லறையையும் கொடுத்துவிட்டுப் போனன். r நாகராஜன் உற்சாக மிமுந்தபோதிலும் முயற்சியை விட வில்லை. அந்தக் கார் நம்பரைக் குறித்து வைத்துக் கொண் டான். அது ஒரு டாக்ஸி என்பதைக்கூட அந்தச் சமயம் அவளுல் தெரிந்துகொள்ள முடியவில்லை. கார் வந்த வழியே பறந்து சென்றதும் நாகராஜன் குழம்பிய மனத்துடன் பக்கத்துக் கடைக்குப் போய் அரை டஜன் புளிப்பு மாம் பழங்களே அதிக விலை கொடுத்து வாங்கிப் போளுன்! மறுதினமே நாகராஜன் எப்படியும் கே. பி. மோஹி னியை நேரில் போய்ப் பார்த்து ஐந்து நிமிஷமாவது அவளுடன் பேசி ஒரு கையெழுத்தை வாங்கிவிடுவதென்று முடிவு செய்தான். அதற்கு ஒரே ஒரு தடங்கல் ஏற்பட்டது. மிஸ் கே. பி. மோஹினியின் விலாசம் தெரியாதே அதற் கென்ன செய்வது ? புத்திசாலியான நாகராஜனுக்கு மோஹினியின் விலாசத்தைக் கண்டுபிடிப்பதுதான ஒரு பிரமாதமான காரியம்? தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றில் யார் எந்த ஸினிமா நrத்திரங்களின் விலாசத்தைக் கேட்டாலும் தெரியப் படுத்துவதென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார் அதன் வினிமா ஆசிரியர். நாகராஜனுக்கு அப்போது அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, 'ஐயா ஆசிரி யரே, மிஸ் கே. பி. மோஹினியின் விலாசத்தைக் கொஞ்சம் தயவு செய்து தெரிவிக்க முடியுமா ?' என்று ஒரு கடிதம் எழுதிக் கேட்டான். அந்தப் பத்திரிகையின் ஸினிமா