பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசூலான வாடகை é & இரண்டு பெரிய அறைகள், ஒரு கூடம் இந்தத் தாழ்வாரத்திலும் பாதியை நீங்கள் உபயோகித்துக் கொள்ள லாம். வாடகை பன்னிரண்டு ரூபாயாகிறது. இந்தத் தெருவில் இவ்வளவு மலிவாக வேறு எங்குமே இடம் கிடைக் காது' என்று சபாபதி அய்யர் வருபவர்களிடம் சொல்லிச் சொல்விப் பாடமாய்ப் போன மேற்படி வார்த்தைகளை அன்று புதிதாக வீடு பார்க்க வந்தவரிடமும் ஒப்பித்தார். ஒஹோ ! இந்தச் சமையலறையில் புகை போகாது போலிருக்கே? ரேழி அறையில் வெளிச்சத்தைக் காணுமே? காற்றும் வராதோ ? கொடி கட்டுவதற்கு வசதி இல்லேயே ? வாடகை என்ன சொன்னீர்கள் ? பன்னிரண்டு ரூபாயா ? அப்பாடா தனி வீடு பார்க்கலாம் போல் இருக்கே ! துவையல் அரைக்க வேண்டுமென்றல் அம்மியைக் காணுேம். எனக்குத் துவையல் என்ருல் உயிராக்கும் ! இந்த வீட்டுக்குக் குடி வந்தால் துவையல் சாதத்தை விட்டு விடணும் போலி ருக்கு ! குழாயில் மணிக்கு எத்தனை படி ஜூலம் சொட்டும் ? என்று வந்தவர் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுச் சபாபதி அய்யரின் இடுப்பை ஒடித்தார். - சபாபதி அய்யர் இதற்கெல்லாம் சளைக்கவில்லை. இவ ரைப் போல் அவர் எத்தனையோ பேர்களைப் பார்த்திருக் கிருர். அதெல்லாம் இல்லைங்காணும் ! ஜன்னலைத் திறந்து விட்டால் போதும். காற்று சிண்டைப் பிய்த்துக் கொண்டு போகும் ' என்ருர். அவர் அப்படிச் சொல்லி முடிப்பதற்குள் வந்தவர் தமது தலையைத் தடவிக் கொண்டார். நல்ல வேளையாகத் தமக்கு வழுக்கைத் தலை ாேன்று ஞாபகம் வந்ததும் சந்தோஷப்பட்டுக் கொண்டார் ! - சபாபதி அய்யர் மேலும், புகை போகவா இடமில்லை ? கரி யடுப்பில் சமைத்துக் கொள்கிறவர்களுக்குத்தான் இங்கே வாடகைக்கு விடுகிறது. எல்லாருக்கும் பொதுவாகப் பின்