பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மெளனப் பிள்ளையார் அவருக்கு வேலை வெட்டி கிடையாது. மனைவி வகையில் வந்த அந்த வீடு அவருக்குச் சொந்தமாயிருந்தது. பத்துப் பன் னிரண்டு ரூபாயில் கூட்டுக் குடித்தனம் இருந்துகொண்டு சொந்த வீட்டு வாடகைப் பணத்தைக் கொண்டு காலrேiபம் பண்ணலாமல்லவா ? அந்த உத்தேசத்துடன்தான் சங்கர ராவ் பூந்தமல்லியிலிருந்த தமது வீட்டில் டு லெட் " போர்டைத் தொங்கவிட்டு, ஜார்ஜ் டவுனுக்குக் குடி வந்து சேர்ந்தார். மேற்படி வீடு அதுவரையில் காலியாகவே இருந்ததால்தான் சங்கர ராவால் அவர் குடியிருந்த வீட்டு வாடகையைக் கொடுக்க முடியவில்லை. - இந்த விவரங்களை யெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு சபாபதி அய்யர் சங்கர ராவையும் அழைத்துக்கொண்டு பூந்தமல்லிக்குப் போய் அந்த வீட்டைத் திறக்கச் சொல்லி வீடு பூராவும் பார்வையிட்டார். சங்கர ராவ், மொத்தம் ஆறு அறைகள். இது கூடம். இந்தத் தாழ்வாரம் பூராவை யும் உபயோகித்துக் கொள்ளலாம். இதோ பார்த்தீர்களா பேஷான அம்மி குழாயில் பாருங்கள், ஜலம் நீர்வீழ்ச்சி மாதிரி கொட்டுகிறது. துணி உலர்த்தக் கொடி எவ்வளவு செளகரியமா யிருக்கிறது, பாருங்கள். வாடகை முப்பதே ரூபாய்தான். இந்தப் பக்கத்தில் இவ்வளவு மலிவாக வேறு விடே கிடைக்காது ' என்று சபாபதி அய்யர் தனக்கு முன்பு ஒப்பித்த பாடத்தை இப்போது திருப்பிச் சொன்னர் சங்கர ராவ். - அதெல்லாம் சரிதாங்காணும். இந்தச் சமையலறை யில் புகைபோக இடமில்லையே?' என்று சபாபதி அய்யர் கேட்டார். -

  • புகையா அடுப்பு மூட்டி இங்கே சமையல் செய்யக் கூடாது. கரியடுப்பில்தான் சமையல் நடக்கணும். காற்றைப் பார்த்திர்களா? எவ்வளவு கணக்காக வீசுகிறது இங்கே?' என்று குத்தலாகச் சொன்னர்.

இருவரும் ஒருவிதமாகப் பேசி முடித்ததும் சங்கர ராவ் சபாபதி அய்யரிடமிருந்து முன்பணமாக ஆறு ரூபாய் வாங்கிக்