பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மெளனப் பிள்ளையார் பொன்னி இம்மாதிரி கேட்டதும் பூங்காவனத்திற்குப் பழைய ஞாபகங்களெல்லாம் வந்து நின்றன. அந்தக் கதை யெல்லாம் பொன்னிக்கு ஒன்றுவிடாமல் நினைவுபடுத்தி, பொன்னி என்னுல்தானே மணியக்கார ருக்கு நீ ஒரு ரூபாய் அபராதம் செலுத்தினய் ? அதற்கு நான் தானே காரணம் ? அந்தக் குற்றத்துக்கு ஈடாகவே திருத்தணி முருகக் கடவுளுக்கு ஒரு ரூபாய் உண்டி செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். அப்படி வேண்டிக் கொள்ளும் போது நீயே எனக்கு மனைவியாகக் கிடைக்கவேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொண்டேன். வா, இப்போதே போவோம்' என்று சொல்லி, பூங்காவனம் பொன்னியுடன் திருத்தணி முருகக் கடவுளைத் தரிசிக்கப் பிராயணமானன்.