பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மெளனப் பிள்ளையார் டுக்கே அதிபதி ஆகிவிட்டார். நீலகிரிமலைப் பிரதேசத்தில் அவருக்கு பிரம்மாண்டமான தேயிலை எஸ்டேட் ஒன்று இருந்தது. சர்க்கார் இப்போது அந்த இ ட த் ைத அழித்து அனேக்கட்டு கட்டி விட்டார்கள். அதற்காகப் பாலகோபாலுக்குப் பல லட்சம் ரூபாய்களே விலையாகக் கொடுத்து விட்டனர். பாலகோபாலனும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது போதுமென்று மொத்தமாகத் தமக்குக் கிடைத்த ப ண த் ைத வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவரைப்போல் அந்த வட்டாரத்தில் தேயிலைத் தோட்டம் வைத்துப் பணம் சம்பாதித்த பேர்வழிகள் வேறு யாருமே இல்லையாகையால் ஊரார் எல்லோரும் அவரைத் தேயிலை ராஜா என்றே அழைக்கத் தொடங்கினர்கள். ஆளுல் தேயிலே ராஜாவைத் தெரிந்த ஆசாமிகளுக்கெல்லாம் அவர் ஒரு கருமி என்றும் தெரிந்திருந்தது. பிச்சைக்காரர்களோ, நன்கொடை வசூலிப் பவர்களோ அவரிடம் போய் ஒரு மணி தானியமோ அல்லது ஒரு செல்லாக் காசோ வாங்கிவிடமுடியாது. இதல்ை அவரைச் சில பேர் கருமி ராஜா என்றும் சொல்லிக் கொண்டார்கள். ஆளுல் அப்படிப்பட்ட கருமி ராஜா சித்ரலேகைக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தார். பாலகோபால் மறுதினமே சித்ரலேகையைப் பார்க்க அவள் வீட்டைத் தேடிச் சென்ருர், அதிருஷ்டவசமாய்ச் சித்ரலேகை அப்போது தனியாக ஸோபாவில் சாய்ந்து புத்த கம் படித்துக்கொண்டிருந்தாள். அதுதான் சமயமென்று பாலகோபால் தன்னைப்பற்றியும் தன்னுடைய அந்தரங்க மான அபிப்பிராயத்தைப்பற்றியும் அவளிடம் ஒளிவு மறைவு இன்றித் தெரிவித்துக் கொண்டார். சித்ரலேகை ஏற்கெனவே பாலகோபாலப்பற்றியும் அவருடைய கருமித்தனத்தைப்பற்றியும் அறிந்து வைத்திருந் தாள். எனவே அவள், நான் சீமைக்குப் போய் வந்தவள். என்னுல் சிக்கனமா யிருக்கமுடியாது. டாம்பிகச் செலவுகள் எனக்கு அதிகம். உங்களுடைய பணம் அநியாயமாய்க்