பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியுகக் கர்ணன் 69 கரைந்துபோகும். நீங்களோ பாவம், ரொம்பவும் செட்டா யிருக்கிறீர்கள்...' என்று ஆரம்பித்தாள். சித்ரலேகா ! உனக்காக நான் என்னுடைய உடல், பொருள், ஆவி மூன்றையுமே கொடுக்கத் தயாராயிருக்கும் போது, பணத்தாளு ஒரு பிரமாதம் ? என்னைப்பற்றிப் பல பேர் பலவிதமாய்ச் சொல்லியிருப்பார்கள். அதையெல்லாம் நீ நிஜமென்று நம்பிவிடாதே. நீ எப்படி வேண்டுமானலும் செலவழித்துக்கொள். அதற்கெல்லாம் நான் தயார் என்று சொல்லிவிட்டுப் பாலகோபால் அவளிடம் விடை பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாலகோபால் பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் தான தர்மங்கள் செய்யத் தொடங்கினர். யார் வந்து எதைக்கேட்டாலும் சரிதான் : இல்லையென்று சொல்லாத வள்ளலாக ஆளுர், கோயில் கட்ட வேண்டுமா ? இந்தாருங்கள் பணம் ஏழைகளுக்கு அன்னதானமா? இதோ இருக்கிறது அரிசி மூட்டை. அநாதை ஆசிரமம் கட்ட வேண்டுமா ? ரொம்ப நல்ல காரியம் பிடியுங் கள் நோட் டை என்று கேட்டதற்கெல்லாம் பணத்தை எடுத்து வீச ஆரம்பித்தார். திடீரென்று இப்படி பாலகோபால னுக்குத் தர்ம சிந்தனை ஏற்பட்டுவிட்டதைக் குறித்து ஊரில் பேச்சு வளர ஆரம்பித்தது. எந்தக் காரியத்துக்கும் குற்றம் க்ண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சில பேர்வழிகள், பால. கோபாலனுடைய தர்மத்துக்கும். ஏதோ மறைமுகமான காரணம் இருக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். பாலகோபால் அதையெல்லாம் சிறிதம் பொருட் படுத்த வில்லை. மேலும் மேலும் அவருடைய தர்மத்தைப்பற்றிப் பத்திரிகைகளில் .ெ ச ய் தி க ள் வெளியாகிக்கொண்டே இருந்தன. - ஒரு நாள் பாலகோபால் சித்ரலேகைக்காக வைர அட்டிகை ஒன்று வாங்கி வந்தார். கண்ணைப் பறிக்கும் அந்த வைர நகைக்கு எத்தனை விலை கொடுத்தாரோ தெரியாது. பாலகோபால் அந்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சித்ரவேகையிடம் சென்ருர்,