பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மெளனப் பிள்ளேயார், சித்ரலேகையின் முகம் வாடியிருந்ததைக் கண்ட பால கோபால் அதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தார். 'நீங்கள் எனக்குக் கொடுத்த வைர அட்டிகைதான் என்ருள் சித்ரலேகை. 'என்ன, வைர அட்டிகையா ' என்று கேட்டு விட்டுப் பாலகோபால் கடகடவென்று வாய் விட்டுச் சிரித்தார். அவர் அப்படிச் சிரித்ததின் காரணம் தெரியாமல் சித்ரலேகை விழித்தபோது, அது தொலைந்துபோய் விட்டதா? போனல் போகட்டும்; இந்த அற்ப விஷயத்துக்காக நீ வருந்தவே வேண்டாம் என்ருர் பாலகோபால். "ரூபாய் பத்தாயிரம் கொடுத்தல்லவா அதை வாங் இனரீர்கள் 'சித்ரலேகா ! உன் அழகுக்கும் குணத்துக்கும் அதைப் போல் ஆயிரம் அட்டிகை வேண்டுமானலும் வாங்கித் தருவேன். நீ மட்டும்...' சித்ரலேகை ஒரு கணம் யோசித்தாள். பிறகு, என் மனம் மாறிவிட்டது. தங்களுடைய தாராள மனத்தையும் தர்ம சிந்தனையையும் கண்டு தங்களையே மணப்பதென்று முடிவு செய்து விட்டேன்' என்ருள். பாலகோபால் பரம ஆச்சரியத்துடன் அவளை உற்றுப் பார்த்தார். சித்ரலேகை சொன்ன வார்த்தையை அவரால் நம்ப முடியவே இல்லே. "நிஜமாகவா, சித்ரலேகை !' ஆமாம்; நிஜமாகத்தான் சொல்கிறேன். அ ந் த த் தரித்திரம் பிடித்த கங்காதரனே நான் மணக்கப்போவதில்லை. என்னுடைய செலவுக்கும் அவருடைய கருமித்தனத்துக்கும் கட்டி வராது ' என்ருள் சித்ரவேகை. பாலகோபாலனுக்குச் சித்ரலேகை சொன்ன வார்த்தை கள் சரியாய்க் காதில் விழவில்லை. அதற்குள் அவருடைய மனம் குழம்பிப் போய்விட்டது. -