பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதமும் கவலையும் 75 எங்கள் வீட்டு நாய் பிறத்தியார் வீட்டு எச்சிலைச் சாப் பிடாது ' என்று ஒரேயடியாய்ப் பதில் கூறினுள் பிள்ளைவாள் மனைவி. - அதற்குமேல், நாய், பேய்" என்று பேச்சு வளர்ந்து சண்டை பலத்தது. சண்டையை ஊரார் வந்து விலக்கும்படி யாயிற்று. இதற்குப் பிறகு பிள்ளைவாளுக்கும் முதலியார்வாளுக்கும் இடையே ஒரு பெரிய அக்னி ஜ்வாலே வீசிக்கொண்டிருந்தது. ஒருவரையொருவர் அவமானப்படுத்துவதற்கான சமயத்தை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். ஒருவர்மீது ஒருவர் வதந்திகளையும் வம்புகளையும் சிருஷ்டித்துக்கொண்டேயிருந் தனர். 涤 சண்டை நடந்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் முதலி யார்வாள் அவருடைய பெண்டு பிள்ளைகளேயெல்லாம் ஊரிலேயே விட்டுவிட்டுச் சிங்கப்பூருக்குப் போ கு ம் ட டி ஆயிற்று. முதலியார் வீட்டுக்குப் பின்புறத்தில் விசாலமானதோர் தோட்டம் இருந்தது. அவர் ஊரிலிருந்தவரை அந்தத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை முதலிய செடிகள் போட்டுக் காய்களைச் சாகுபடி செய்து வந்தார். ஆனால், அந்தத் தோட்ட நிலம் சம்பந்த மாக ஏதோ ஒரு வியாஜ்யமும் இருந்து வந்தது. முதலியார் ஊரை விட்டுப் போனதும், தோட்டத்தைக் கவனிக்கத் தக்க ஆளில்லாமற் போயிற்று. யார் குழி வெட்டுவது ? யார் பாத்தி கட்டுவது ? யார் செடி வைப்பது ? யார் தண்ணிர் இறைப்பது ? முதலியாரின் மனைவி அவர் ஊருக்குக் கிளம்புபோது, தோட்டம் பாழாய்விடுமே, இதற்கு என்ன செய்வது ?" என்று கேட்டாள். அதற்கு முதலியார் அவள் காதோடு, காதாய் அரை மணி நேரம் ஏதோ ரகசியமாகச் சொல்லி விட்டுப் போளுர். - -