பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனப் பிள்ளையார் ப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண் டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற வி ரு கr க் களெல்லாம்கூட அங் கே இருந்தன. ஆகையால் அந்தக் காட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு விறகுப் பஞ்சமே கிடையாது. ஆனல், சாப்பிடுவதற்குத்தான் ஒன்றுமில்லை ! என்ரு லும் அப்பாசாமி ஒரு சந்தோஷப் பிரகிருதி. 'நாளைக்கு என்ன செய்வது ?' என்ற கவலேயே அவனுக்குக் கிடையாது. அவன் அந்தப் பாதைக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய அரச மரத்துக்கு அடியில் குடிசைபோட்டு வாசம் செய்து வந்தான். அந்த அரச மரம் அவன் பார்த்து வளர்ந்த மரம். ஆகையால் அவனுக்கு அதன்மேல் அத்தியந்த விசுவாசம் உண்டு. அந்த மரமும் அவனிடத்தில் ஓயாமல் இராப் பகலாய்ச் சல சல' வென்று பேசிக்கொண்டே யிருக்கும். அவனுடைய குழந்தை பானுமதிக்குப் பேசவே தெரி யாது, குழந்தை பானுவிடம் அவன் அளவு கடந்த அன்பு வைத்திருந்தான். தாயற்ற அந்தக் குழந்தையைப் பார்த்த போதெல்லாம் அவனுடைய குழி விழுந்த கண்களில் ஜலம் ததும்பும். குடிசைக்குப் பின்புறத்தில் அப்பாசாமிக்குச் சொந்தமாக ஒரு வாழைத் தோட்டம் இருந்தது. வயிற்றுக்கு ஒன்றுமே கிட்டாத நாட்களில் அந்தத் தோட்டத்திலிருந்து பழுத்த பழங்களாகக் கொண்டு வந்து, பானுவுக்குக் கொடுத்துத் தானும் உண்பான். பானு வெள்ளாட்டுப் பாலையும் வாழைப்பழத்தையும் சாப்பிட்டு வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவன் தன் குழந்தை பானுவைத் தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டு ஆறு மைலுக்கப்பாலுள்ள