பக்கம்:வசந்த மல்லிகா.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய ஊர்வசி

119

மறுமொழி சொல்லாமலிருப்பது பிசகென்று நினைத்து, "வழக்கமாக வருகிறவர் இன்னும் வரவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. இவ்வளவு நேரமான பிறகு இனி வருவாரோ மாட்டாரோ தெரியவில்லையே!" என்று நிரம்பவும் கிலேசத் தோடு தெரிவித்தாள். அதைக் கேட்ட பீமராவ், "நீங்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதோ நான் துணையாக வருகிறேன். போவோம் வாருங்கள்" என்றான்.

"ஐயோ பாவம்! உமக்கு அவ்வளவு சிரமம் கொடுக்கக் கூடாது" என்றாள் கிருஷ்ணவேணி.

"சிரமமொன்றுமில்லை; அரை நாழிகைக்குள் உங்களை வீட்டில் கொணர்ந்து விட்டுவிட்டு நான் வந்து விடுகிறேன்" என்று வற்புறுத்திக் கூறினான் பீமராவ்.

"யார் இவ்வளவு தூரம் உதவி செய்யப் போகிறார்கள்! இருந்தாலும் உமக்கு இவ்வளவு சிரமம் கொடுக்க வேண்டியிருப்பதைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன்" என்று சொல்லியவண்ணம் கிருஷ்ணவேணி நடக்க ஆரம்பித்தாள். அவளை அடுத்தாற்போல மல்லிகா தொடர்ந்து நடந்து சென் றாள். தான் துணை வருவதற்கு அவர்கள் சம்மதித்து விட்டார்கள் என்றுணர்ந்த பீமராவ் அவர்களைத் தொடர்ந்து நடந்தான்.

அவ்விதம் மூவரும் மெளனமாக சற்று தூரம் நடந்தனர் அபபடி மெளனமாக நடப்பது சரியல்லவென்று நினைத்த கிருஷ்ணவேணி, "ஏன் ஐயா இன்று நீர் நாடகம் பார்த்தீரா?” என்றாள்.

"ஆம், பார்த்தேன். ஆனால், நான் உன்னைப் வஞ்சப் புகழ்ச்சி செய்வதாக நினைக்கக் கூடாது. இன்று நீ நிரம்பவும் அழகாக நடித்தாய்! எனக்கு உன் விஷயத்தில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?" என்றான் பீமராவ்.

“என்னுடைய வேஷமிருக்கட்டும்; அதுதான் மகா பெரிய வேஷமாயிற்றே! ஸஞ்சலாட்சியின் வேஷம் எப்படி இருந்தது?" என்றாள் கிருஷ்ணவேணி.

"ஊர் முழுவதும் அதைப் பற்றிப் புகழும்போது, நான் அதைச் சொல்ல வேண்டுவதில்லை என்று மறுமொழி சொல்லிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/137&oldid=1232128" இலிருந்து மீள்விக்கப்பட்டது