பக்கம்:வசந்த மல்லிகா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமயந்தியும் வஸந்தராவும்

135

சொல்லியிருந்தானாகையால், அவள் வழக்கமாக அங்கு போய்க் கொண்டிருந்தாள். தமயந்தி வஸந்தராவை நன்றாக அறிவாளாகையால், அவரைக் கண்டு மரியாதையாக "தாங்களா இந்த ஆபத்தில் எனக்கு உதவியது! இதுவும் ஓர் அதிர்ஷ்டந்தான் இன்றைக்கு என்னுடைய உயிரைத் தாங்கள்தான் காப்பாற்றீனீர்கள்- என்றாள்.

"என்னவோ! எல்லாம் தெய்வசங்கல்பம்; நம்மாலாவதென்ன! பாம்பை மிதித்தால் சாவரோ, விதித்தால் சாவரோ என்று சொல்வார்கள். அதைப் போல், இதெல்லாம் நம்முடைய செய்லா?" என்றார்.

"இந்தக் குதிரை மறுபடியும் இடக்குச் செய்தாலும் செய்யும். தாங்களும் இதில் உட்கார்ந்து கொண்டு, என்னுடைய வீடு வரையில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தால், பெருத்த உபகாராமாயிருக்கும்!" என்றாள்.

"அது பெரிய காரியமா? அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிக்கொண்டே அவர் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கால் நாழிகையில் வண்டி தம்பு செட்டி வீதியில் அவளிறங்கியிருந்த மெத்தை வீட்டில் போய்ச் சேர்ந்தது.

இருவரும் கீழே இறங்கிய பின் வஸந்தராவ், "நான் போய் விட்டு வருகிறேன்" என்றார். தமயந்தி புன்சிரிப்போடு நயமாக, "இவ்வளவு தூரம் வந்தவர்கள் உள்ளே வராமல் போகக் கூடாது. தயவு செய்து உள்ளே வந்து ஐந்து நிமிஷ நேரமாவது இருந்து விட்டுப் போக வேண்டும்" என்று வேண்டினாள். அவர் நிரம்பவும் இளகிய மனதைக் கொண்டவராதலால் மறுத்துப் பேச மாட்டாமல் அதற்கிணங்கி உள்ளே நடந்தார். அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியொன்றில் உட்காரும்படி தமயத்தி அவரை வேண்ட, அவர் அவ்விதமே உட்கார்தார்.

உடனே தம்பந்தி உள்ளே போய் அடுத்த நிமிஷத்தில் காப்பி சிற்றுண்டி முதலியவற்றுடன் திரும்பி வந்து அவற்றை அவருக்கு முன்னால் இருந்த மேஜையின்மேல் வைத்து அருந்தும்படி வேண்டினாள் .

அதைக் கண்ட வஸ்ந்தராவ் லஜ்ஜையடைந்து, "என்னுடைய உடம்பு சரியான நிலைமையில்லை. போஜனத்தை தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/153&oldid=1234410" இலிருந்து மீள்விக்கப்பட்டது