'ஹய்' என்று வணங்கிய நிச்சிகாவா மேஜை டிராயரில் வைத்திருந்த அந்த டயரியை எடுத்துக் கொடுக்க, தாங்க்ஸ்' என்று சொல்லிவிட்டு வேகமாய்த் திரும்பி கடந்தான் ஜார்ஜ். டயரியை ஓர் உறையில் போட்டு அதை ரப்பர் பாண்டினால் கட்டி வைத்திருந்தார் கிச்சிகாவா. ஜார்ஜ் அந்த உறையைப் பிரித்தபோது அதிலிருந்து ஒரு விளிட்டிங் கார்ட் கீழே விழுந்தது. இது ஏது? இந்தக் கார்டு என் டயரிக்குள் எப்படி வந்தது? யார் வைத்திருப்பார்கள்?" என்று யோசித்தான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தான். ‘என்னை, யாரோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நிழல்போல் என்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த கார்டை என் டயரிக்குள் யார் எப்போது வைத்திருப்பார்கள்?" என்று குழம்பினான். அந்தக் கார்டில் ஒரு பெண்ணின் பெயர் இருந்தது. அவள் டெலிபோன் கம்பருடன் விலாசம் தந்திருந்தாள். பெயர் ஷாமா-சிச்சி. 4. -
பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/page39-741px-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf.jpg)