பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 195.

கண்ணன் : ஆகாது தந்தையே. அதைக் குறிக் கத்தான் தாங்கள் தகுதியுடையவருக்கு என்று ஒரு சொல்லை மேலே அமைத்துச் சொன்னிர்கள். . 'ஆம் உள்ளவருக்குக் கொடுப்பது உதவியாகாது. வேண்டாத வேளையில் கொடுப்பதும் உதவியாகாது” உதவியைப் பெறுபவர் அவ்வுதவிக்கு உரியவராய், அவ் வுதவியைச் சிதைக்காமல் பயன்படுத்துபவராய் அமை வாராயின் அவரே தக்கவர். அவருக்கு உற்ற காலத்தில் செய்யப்படுவதே ஒப்புரவு ஆகும். ஒப்புரவைச் செய் வோரும் மன இன்பம் பெறுவர். பெறுவோருக்கும் வாழ்வின்பம் உண்டு. இவ்வாறு இருவருக்கும் ஒத்து நிற்கும் இன்பம் தருவது ஒப்புரவு. ஆகையால் "ஒப்புர வைப் போன்று நன்மையைத் தரும் பிற எவற்றையும் மேலவர் உலகத்தும் பெற முடியாது ; இந்த உலகத்தும், பெற முடியாது. இந்த ஒப்புரவின் சிறப்பை அறிந்து வாழ்பவனே வாழ்வை அறிந்தவன். “ஒப்புரவின் கன்மையறிந்து வாழ்பவனே உயிரோட்டமுள்ள வாழ்க்கை வாழ்பவளுவான். அதனை அறியாத மற்றையவன் செத்த வருள் வைக்கப்படுவான். அவன் வாழ்வு உயிரோட்ட மற்ற வாழ்வாகும்.

ஓர் ஊருணியும்

இரு மரங்களும்

மகனே, ஒப்புரவின் சிறப்பையும், இன்றியமை,

யாமையையும் இயற்கைகளே அறிவிப்பவை. இதனை

ག. --. མ་་་་ -མ~).-༤: حمہ۔--TamilBOT (பேச்சு) ----یہ۔--~-۔۔۔۔-------

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.

  • ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் , மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.