பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகன் 81 வான்வெளுக்கத் தாய்ப்பறவை மலைச்சாரல் எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு நெடுநேரம் சுற்றி ஊன் தேடித் திரிந்ததுவே! ஊன்பொதிந்த சின்ன உயிரொன்றும் கிடைக்கவில்லே! என் செய்யும் பேடை! கான்தேடி வயல்தேடிக் கடல் பரப்பும் தேடிக் கண்ட பயன் களைப்பொன்றே! கூடுதிரும் பிற்றே! ஊனுக்கு வாய் திறக்கும் குஞ்சுகளைக் கண்டே ஒருநொடியில் தன்னுடலைக் கிழித்துமூக் காலே! 4. குஞ்சுகளுக் கருதினிலே தாய்ப்பறவை சென்று கொட்டுகின்ற குருதியினைக் குஞ்சுகளுக்(கு) ஊட்டும் பஞ்சொத்த பார்ப்புகளோ பசியாறு மட்டும் பருகிற்றுத் தாயுடலின் செங்குறுதி யாவும்! அஞ்சவில்லை! அசையவில்லை! தாயன்பே அன்பாம்! அருகினிலே தள்ளாடி அசைந்தசைந்து சென்றே மஞ்சள்வாய்க் குஞ்சுகட்கு வயிருர ஊட்டி மகிழ்ச்சியிலே வெண்கழுகு மாண்டதுவே அந்தோ! 5 வெண்கழுகைப் போன்றவரே நற்கவிஞர் கூட்டம்! விளையாட்டாய்ச் சொல்லவில்லை! உண்மை! முழுஉண்மை! புண்பட்ட உள்ளந்தான் பிறர்புண்ணேக் காணும்! புரியாத சிக்கலெலாம் புரிந்தமனம் நீக்கும்! கண்ணுக்குத் தெரியாமல் அழுதழுது சோர்ந்த கவிஞர்தாம் கண்கலுழும் கவிபுனையக் கூடும்! மண்ணுள்ளோர் சிரிப்பதற்கும் வாழ்வதற்கும் இந்த மாக்கவிஞர் இல்லையெனில் நாடுகடு காடே! 6 surr–6