பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84, élity ணிதாசன் நெஞ்சங் கவர்ந்த நிறைகவி வாணரைக் கொஞ்சம் விளக்கமாய்க் கூற முடியுமா? விடை : வாழுங் கவிஞர் வரிசையில் யாவரும் சூழும் தொடர்பிற் குரியவராவார்; எனினும் தமிழின் இயல்புணர்ந் தோர்கள் இனிக்கும் கரும்பாய் இருப்பர் மனத்திலே! விரு : 5 தாசனும் வாணியும் தண்டமிழ்ச் சொற்களா? லாசனை போலே வடமொழி என்ருல்; இதனை விரும்பியே ஏற்றதும் ஏளுே? முதற்பெயர் ஏதோ மொழிந்திட வேண்டும் விடை : வாணியும் தாசனும் சுத்த வடசொல்லே! ஏணியைப் போலென ஏற்றிவிட் டோர்கள் அளித்த புனைபெயர்; அந்நாள் முதற்றே நிலைத்து வருதல் நெடுநாள் பழக்கம்! அரங்கன் இயற்பெயர்: அப்பெயர் இந்நாள் கரைந்தது கண்டோம்! பெயரில் கவலைஏன்? விஞ 6 செய்யுள் இலக்கணம் சிந்தையில் தேக்கிடார் பெய்யும் தமிழ்ச்சொல் பெருங்கவி என்பர்! கவிதைக் கிலக்கணம் கற்பெனும் கொள்கை புவியில் புதுமை புனைவார்க் கிலையிவண் மாசில் கவித்துறை மாண்பைக் கெடுத்திடும் வேசிக் கவிதை விளைதலும் நன்ருே?