பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வாணிதாசன் என் நன்றி! கடல் முழக்கும் ஒர்பால்;நீள் தாழைப்பூப் பூத்துக் கழிமுழக்கும் ஒர்பால்;முட் காட்டோர நன்செய் இடமமுழக்கும் கால்வாய்கள்; இருகொம்பால் முட்டி இடிமுழக்கும் காரெருமை நீள்வாலைத் தூக்கி; அடம்பிடிக்கும் குழவியைப்போல் அதிகாலை தேரம் அணியணியாய் முழக்கும்.நற் ருெழிற்பேட்டைச் சங்கம்: உடல் உயிரும் தமிழ்முழக்கும் சான்ருேர்வாழ் புதுவை: ஒண்புகழை நனிமூழக்கும் என்தமிழ்ப்பாப் பாடல்! 1 அலைஇசைக்கக் கேட்டிருக்கும் புதுவை நகர் மன்றம் அமர்ந்திருக்கும் அமைச்சர்களே! பெரியோரே! சாரல் மலையிசைக்கும் அருவியெனக் குளிர்மையினைச் சேர்க்கும் மணிவயிற்றுத் தாய்மாரே! தமிழகத்தைக் காக்கச் சிலை இசைக்கும் படிக்கிளம்பும் இளஞாயி ருெத்த சீரியதல் மறவோரே செந்தமிழர் அன்னர் கலை இசைக்கும் தேன்றமிழ்ச்சொல் நல்இளைஞர்:செஞ்சொற் கவிபாடி வாணிதாசன் கைகூப்பி னேனே! 2 பன்ஞளின் நன்னினைவாம் சீர்ப்புதுவை மண்ணில் பாவேந்தர் சிலையெடுக்க வேண்டுமெனும் வேட்கை! சின்னளின் முன்புதுவை செயலாற்றும் அரசு சிறப்படைந்து போன செயல் நாமெல்லாம் கண்டோம்! தன்னளின் நாள் புதுவை நம்மாக வாழ்க! . நாமெல்லாம் முழுநிலவின் கடலலைபோல் ஆளுேம்! இந்நாளின் நம்புதுவைத் தமிழ்ச்சங்கம் வாணிக்(கு) எடுத்ததுவாம் பாராட்டு மிகுநன்றி! வாழ்த்தே! 3.