பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 . காளிதாசன் சொல்லுக காக்காய்! սո*-ուսո*աոա கரிய காக்காய்! நீயும் உன்றன் இன்பப் பேடையும் வடதிசை சென்று இமயம் பார்த்துத் தென்திசை நோக்கித் திரும்புங் காலை கோட்டை கொத்தளம் கோபுரம் நிறைந்த 5 தில்லி யருகே செல்லுக விரைந்தே தென்னுட் டாரியன் செருக்கில் மிதந்து மன்னவன் தானென மனப்பால் குடித்து நின்றுகொண்டிருப்பான் நீள் நீண் மாடியில்! அன்னவன் அருகில் அண்டங் காக்காய்! 10 இந்தியை எதிர்க்கத் திராவிட இளைஞர் வந்துகொண்டிருக்கிருர்; வந்துகொண்டிருக்கிருt; வடமலை நோக்கி வந்துகொண் டிருக்கிருர்! முன்னுள் குட்டுவன் முடியை நெரித்ததை மறந்தா யாயினும் மறந்திடப் போமோ? 15 திராவிட நாட்டில் இந்தியை அன்று திணிக்க நினைத்துத் திணறிய திணறல்? திராவிட நாட்டில் இந்தியை மீண்டும் திணிக்க வேண்டாம்; திணிப்பா யாயின் நீயும் உன்றன் அரசியல் நண்பரும் 20 அல்லல் உறுவீர் என்றே சொல்லுக காக்காய்! சொல்லுக நீயே! #2