பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் வழி வகுத்தால் போதும் நான்பிறந்த இந்நாளில் நல்லன்பர் கூடி நாட்டிற்கு நீர்சுறும் செய்தியுண்டோ என்ருர்! வான்பிறந்த வெய்யோனல் ஊன் பிறந்த துண்டாம்! வளர்ந்துவரு உயிரினங்கள் கதிரியக்க ஆக்கம்! தேன் பிறந்த செய்தியெலாம் பூக்கூட்டம் சென்று செவியோடு வண்டிற்கே சொன்னதில்லை என்றும்! கான்பிறந்து திரிகின்ற புள்ளினம்போல் இன்றிக் கைகால்கள் முளைத்துள்ளேன்! கண்டபயன் என்னும்? ! ஊருக்கே உழைப்பதுவும், ஊர்வாழும் மக்கள் உயர்வுக்கே உழைப்பதுவும் நற்கவிஞர் வாழ்க்கை! தேருக்கே அச்சாணி! திசைதிருப்ப முட்டுத் தெகுவெல்லாம் கொடுப்பதற்குத் திரண்டதோள் வேண்டும்! காருக்கே யாtசொன்னர் கடல் நீரை மொண்டு கழனியெலாம் வளமாக்க? நாம்வாழும் நாட்டில் நேருக்கு நேர்நடக்கும் அறிவற்ற செய்கை - நெறிப்படுத்த என்பாடல் வழிவகுத்தால் போதும்! 2 அத்தியிலே கோயிலெலாம் மணியடிக்கக் கேட்பேன்; ஆனலும் எனதுள்ளம் அமைதிகொள்வ தில்லை! சந்தியிலே கூடுகின்ற கூட்டம்போல் இன்றித் தமிழ்மக்கள் தாய்தாட்டின் நலம்பேண வேண்டும்!