பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வாணிதாசன் விழித்திருக்கும் வேளையும், நான் வினைமுடிக்கும் வேளையும்-வாழ வினைமுடிக்கும் வேளையும் கழுத்திழுக்கக் குந்திக்குந்திக் கவிதைபாடும் வேளையும்-தமிழ்க் கவிதையாடும் வேளையும் 5 பழுத்திருக்கும் மரத்தைநோக்கிப் பறந்துசெல்லும் புட்கள் போல்-நாளும் பறந்துசெல்லும் புட்கள் போல் கொழுத்திருக்கும் செல்கர் இல்லம் குறுகியோடப் பாடுவேன்-பகிர்ந்து கொடுத்துதவப் பாடுவேன் 6 தேக்கிவைத்த பொருட்களெல்லாம் தெருக்கோருநாள் வந்திடும்-ஆம் தெருக்கொருநாள் வந்திடும் ஆக்கம்வேண்டும் அறிவுவேண்டும் அன்புவேண்டும் நெஞ்சிலே-என்றும் அன்புவேண்டும் நெஞ்சிலே! 7 உண்டுவாழ்தல் உழைத்துவாழ்தல் உயிரினத்தின் கடமையாம்-வாழும் உயிரினத்தின் கடமையாம் வண்டைப்போல ஈட்டிவைத்தால் மக்களெல்லாம் ஊமையோ?-தேன் வடித்தெடுப்பார் தீமையோ! 30-7-73