பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வாணிதாசன் கடல்கடந்து கலஞ்செலுத்திக் கடாரம் வென்ற கதையெல்லாம் கல்வெட்டுச் சொல்லக் கேட்டும் உடல்சிறியர் நமைஏய்க்கப் பார்க்கின் ருர்கள்! நாமெல்லாம் ஊமையென்ற நினைவு போலும்! மடல்பெரிதே என்போர்க்கே மகிழம் பூவின் மணம்பெரிதை நினைவூட்டும் மறவர் கூட்டம்! படர் இருளைக் கிழித்தெறியும் பரிதிவாழ்த்திப் பழமைக்கிங் கின்ருேடே கணக்குத் தீர்ப்போம்! 4 வாளேந்தி அரசாண்ட முன்னுள் வேந்தர் மடியிருத்தித் தாய்மொழியை வளர்த்துக் காத்தார்! தோளேந்தி வறுமையினைத் துடைத்ததாலே தொன்னூலைப் பெரும்புலவர் படைத்தார்! இன்ருே கோளின்றிக் குறைமொழியைக் கேட்டே ஏற்றுக் குடிகெட்டோம்! எழுகதிரைக் கண்டோம் வாழி! மீளாத கொடுந்துயரம் மீள வேண்டும்! விரைவாக இன்ருேடே கணக்குத் தீர்ப்போம்! 3 தாய்நாடும் தாய்மொழியும் வாழ வேண்டும்! தலைநிமிர்ந்து மற்றவர்போல் நடக்க வேண்டும்! காயாத வானத்தும் கதிரைச் சேர்க்கும் விஞ்ஞானக் கல்விவளம் கற்க வேண்டும்! ஓயாது தாயகத்தின் உயர்வுக் காக உயிருள்ளோர் யாவருமே உழைக்க வேண்டும்! வேய்மலைபின் எழுகதிரைக் கண்டோம் வாழி! விரைவாகக் குறைமுடிக்கக் கணக்குத் தீர்ப்போம்! 6 17-12-66