பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் பரவட்டும் தீயே! கார்வொய்த்த காலத்தும் நீர்பொய்க்கா நாடு! கல்துளைத்துக் கலைவளர்த்து நெல்விளைத்த நாடு! கூர்பொய்த்த வேலெடுத்தும் பகைவெட்டிச் சாய்த்த குன்றுநிகர் தோள்மறவர் வாழ்ந்ததிரு நாடு: சீர்பொய்த்துப் போனதுவோ? அந்தந்தோ அந்தோ! செந்தமிழர் நிலைஇதுவா? இந்நிலையை மாற்றப் பேர்பொய்த்துப் போகாமுன் எழுந்தோடி வாரீர்! பிற்போக்கு நிலைமாறப் பரவட்டும் தீயே! I முல்லைக்குத் தேர்சந்தான்; முன்பாடி வந்த முத்தமிழ்ப்பா வாணர்க்குத் தன்னுட்டை சந்தான் இல்லையென்ற சொல்லுக்கே இடமில்லை அந்நாள் இன்மருந்தும் அயலவர்க்குப் பங்கிட்டே உண்டான்! பல்வளமும் நிறைந்திருந்தும் தாயகமே! மக்கள் பசிநோயால் வாடுவதோ? இந்நிலையை மாற்ற எல்லோரும் புறப்படுவோம்! புத்துலகம் காண எங்கெங்கும் பரவட்டும் பரவட்டும் தீயே! 笼 படைபெருக்கி வளம்பெருக்கிப் பலதொழிலும் கண்டு. பண்போடு கலைவளர்த்து வெற்றிமுர சார்த்துக் கடல்கடந்து புகழ்நட்டோம் முன்னாளில்! அந்தக் கதையெல்லாம்வெறுங்கதையா?கடாரம்சொல்லாதா? வடக்கினிலே படைதேக்கி வடஎல்லை தாண்டி வந்தவகை இன்னும்முன் வர என்னும் ஈனக் கொடும்பகையை முறியடிப்போம்! கோழைகளா மக்கள்? கொழுந்துவிட்டுப் பரவட்டும் பரவட்டும் தியே! 3