பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் | 1 ஆக்கம் சேர்ப்போம்! உன்னுவதும் உறங்குவதும் பெரிய தொழிலாய் ஊர்ப்பேச்சுப் பேசிக்கா லங்கடத்த மாட்டோம்! பெண்ணுெருத்தி சிக்கனமாய்ச் சேர்த்த பொருளைப் பிள்ளையன்றிப் பிறரடைய மனஞ்சகிப் பானே? மண்ணரசி தமிழன்னை ஈன்றமக் கள் நாம்! வழக்கப்படி நாமலவோ ஆளப் பிறந்தோர்? கண்ணுெளியாம் நம் தமிழர் நாடு நமக்கே கண்ணிழந்து வாழ்வதினும் வீழ்வது மேலாம்! i தலைசாய்த்துக் கைசட்டி மான மிழந்து தலைவணங்கிப் பிறர்க்கேவல் செய்ய மாட்டோம்; மலைநாட்டுக் குறவரைப்போல் எங்கும் திரிவோம் மண்கிளறிக் கிழங்குண்டு வாழ்ந்து வருவோம் சிலைவலியால் இமயம்வரை வெற்றி பரப்பிச் செந்தமிழைக் காத்தசேரன் சொந்த மக்கள் நாம் அலைகடலின் வழிவந்து நம்மை விழியால் . அடிமை கொண்டாள் அன்னியப்பெண் அழிந்தோம் - - மண்ணில், 2 பண்டைத்தமிழ் நாட்டுணர்வை நாளும் வளர்ப்போம் பழமையினில் புதுமையெனும் மெருகைக் கொடுப்போம் அண்டைஅய லார்நம்மைக் கண்டு நகைத்த அந்தக்காலம் போனதின்று வந்தது நன்னன் கெண்டைவிழிப் பெண்ணினத்திற் கின்னல் புரியும் கிழக்கட்டுப்பாட்டைநல் அறிவால் தீய்ப்போம் சண்டைசெய்யும் மேனுட்டு வீணர் நாமலோம். சன்மார்க்க மேயுயிராய்ப் գտծո செய்வோம்