பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 . வாணிதாசன் உனக்கேன் இல்லை அக்கவலை விண்ணும் மண்ணும் விரிகடலும் வெவ்வே றென்றே மனித இன எண்ணம் முதிர்ந்த இந்நாளில் உனக்கேன் இல்லை அக் கவலை? மண்ணின் விடுதலை பிறப்புரிமை! மகனே எழுவாய்! போர்முரசும் விண்ணும் அதிர அறைவாய்நீ! விடுதலை! தாயகம் விடுதலையே! # அண்டை அயலில் வாழ்ந்திடுவோர் அத்தனை பேரும் மானிடரே! சண்டை சச்சர வில்லாது, தாயக விடுதலை வேண்டாது, மண்டே இட்டே ஒருநாடாய் வாழ்தல் எங்கு நீ கண்டாய்? முண்டி எழுவாய்! போர்முரசம் முழக்கு! தாயகம் விடுதலையே! 2 கொல்லைக் குண்டே தனிவரப்பு! குளத்துக் குண்டே பெரியகரை! எல்லைக் கோடு நாடெங்கும் இருக்கக் கண்டும் என்செய்தாய்? பல் லைக் காட்டி உனைஏய்க்கப் பசப்பும் வார்த்தை ஒருநாடு சொல்லைக் கேட்பாய்! போர்முரசம் தூக்கு தாயகம் விடுதலையே! 3.