பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/58

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கவிதைகள்

30

ஆண் :
கிள்ளை இணைந்து கத்தக் கேட்டேன்-சிட்டு
கிளையில் இணைந்திருக்கக் கண்டேன்
கொள்ளை கொள்ளை காதல் இன்பம்!-உன்றன்
குளிர்விழிக் கீடோ பேரின்பம்?

இருவரும்:
எழுத்துப் புணர்ச்சியினைப் போலே-நாம்
இரண்டற ஒன்றிவிட்ட தாலே
இழுக்கின்றி வாழ்வோம் புகழோடே!-நாம்
என்றென்றும் வாழ்வோம் மகிழ்வோடே!
1–2–65