பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 4 § சொல்லேன் சொல்லேன்: காதலிப்பது காசுக்கா?-அன்றிக் - கண்ணழகுக்கா? உலகில் காதலுக்கு வகையேதும் கண்டிருந்தால் நீயென க்குச் சொல்லேன்! சொல்லேன்! l மோதுகின்ற கடலலையும்-கரையில் முன்தாழ்ந்த புன்னைகளும் ஏதுக்குக் கெக்கலிக்கும்? இடைநிலையைக் கண்டிருந்தால் சொல்லேன்! சொல்லேன்! 2 பழுத்திருக்கும் கோவைக்கும்-வானில் பறந்திருக்கும் கிள்ளைக்கும் வழித்துணையாய் வத்தவர் யார்? வந்தவரைக் கண்டிருந்தால் - சொல்லேன்! சொல்லேன்! . 3 கரைமோதும் கடலுக்கும்-வானில் கதிரி பரப்பும் நிலவுக்கும் r வரைவு பேச வந்தவர் யார்? வந்தவரைக் கன்டிருந்தால் சொல்லேன்! சொல்லேன்! - 4 பூத்திருக்கும் பூக்களுக்கும்-புள்ளிப் பொரிவண்டுக் கூட்டத்திற்கும் காத்திருக்கச் சொன்னதியார்? கண்டிருந்தால் நீயெண்க்குச் சொல்லேன்! சொல்லேன்! 5 به سمتسع همه