பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 தொடுவானப் பரிதிக்கும்-கால்ைத் துள்ளிவரு வெள்ளிக்கும் விடிகாலைத் துTதனுப்பி விட்ட வர் யார்? கண்டிருந்தால் சொல்லேன்! சொல்லேன்! வீசுகுளிர் நீர்நிலையில்-என்றும் மேவாத பூவண்டும் ஏசலினல் பூசலினல் இணைபிரிந்தோர் எங்குண்டாம்? சொல்லேன்! சொல்லேன்! முன்னழகைப் பின்னழகை-அன்றி முகத்தழகை வேறழகை என்னழகைக் கண்டுகாதல் கொண்டேன்! ஏன் தயங்கு கின்ருய்நீ? சொல்லேன்! சொல்லேன்! எங்கிருந்தோ எப்படியோ வந்தாய்! இணைந்திருந்தாய் சிலகாலம்! மங்குபக லாகிவிட்டாய்! இன்றே மறந்திடுமோ காதலுள்ளம்? சொல்லேன்? சொல்லேன்! 23–10–71 வாணிதாசன்