பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகக் 錐 இன்னும் அவள்மேல் தினப்பா? பொன்னைப் போலத் தாழை பூத்துச் சிரிக்கக் கண்டும் இன்னும் பாடா திருந்தால்-புலவா : ஏகம் இந்த உலகம்! f நீலக் கடல்மேல் தாழ்ந்து - நீண்ட புன்னே பூத்தும் சாலப் பாடா திருந்தால்-புலவா! தமிழ்நா டுன்னை ஏசும்! 2 கழியில் நீலம் பூக்கக் கண்டால் ஏக்கம் உண்டோ? இழிவாய்ப் பேசும் உலகம்!-புலவா! இன்னும் அவள்மேல் நினைப்பா: 3 கட்டு மரத்தைக் கட்டிக் கடலே எதிர்த்தல் வாழ்க்கை1 விட்டுத் தள்ளிப் போடு!-புவைா! மேன்மைத் தமிழைப் பாடு: 4 கடலில் கலக்கும் ஆற்றில் கடன் மீன் ஏறிப் போதல் நடக்கும் செய்கை அவளும்-புலவா! நடந்தாள்; விட்டுத் தள்ளு! - 5 தென்னம் பாளை வெடிக்கச் சிறுவர் நண்டைப் பிடிக்க இன்னும் பாடா திருந்தால்-புலவா! ஏசும் இந்த உலகம்! - 6