பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 71 கவலை மாற்றுகவே! காரினம் மறைந்த கடல்நிற வானமும் நீரினைச் சொரிந்து நிறைத்திடக் கண்டனம்! கங்குல் மாய்ந்த கதிர்ஒளி காலையில் பொங்கு நீள்கடல் புறப்படக் கண்டனம்! திங்கள் வானில் மறையினும் செவ்வொளி 5 மங்கு மாலையில் வந்திடக் கண்டனம்! வற்றி மாய்ந்த குளத்துத் தாமரை உற்ற நீர்த்தலை உயரக் கண்டனம்! குளிரில் ஒடுங்கிய குன்ற மாங்குயில் தளிரைக் கோதி இசைத்திடக் கண்டனம்! ić காய்கள் உதிர்த்த காட்டு மரமெலாக் காய்த்துப் பூத்துக் கணிதரக் கண்டனம்! ஈன்ற அன்னை இறந்திடில் மீண்டுமே தோன்றல் உண்டோ? சொல்லுநர் யாவரே? - அன்னை அன்னையே! பொன்னம்மாள் அன்னையே! 15 பொன்னை மானுமோர் பூசிய பொன்முலாம்? மண்ணில் தோன்றிய யாவையும் மண்ணினில் திண்ணம் மாய்வது! மாய்வது திண்னமே! இன்ருே நேற்ருே இறப்பதும் பிறப்பதும்! என்றும் நடக்கும் இயற்கை நிகழ்ச்சியே! . 20 அன்னல் வில்லாள அன்பரே! கண்ணிர் நிறுத்திக் கவலைமாற் றுகவே! 22 1—8-66 தில்ல்ை வில்லாளன் அன்னையார் பொன்னம்மாளின் நீத்தார் நினைவு நாளின் போது பாடிய ஆறுதல்மொழி.