பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞரேறு வாணிதாசன் தோற்றம் : 22.1.1915 மறைவு 7.9.1974 ஏன் எழுதுகிறேன்? கான் என் கவிதையின் வாயிலாகப் படிப்பவர்களுக்குச் சங்க கால இலக்கிய கினைவைத் தூண்ட ஆசைப்படுகிறேன் சங்க இலக்கியப் பொற்காலக் கவிதைகளைப் போல் மீண்டும் தரமான கவிதைகள் தோன்ற வழி செய்யவேண்டும். அதற்கான எதிர்காலக் கவிஞர்களை உண்டாக்க வேண்டும் என்பதே என் ஆசை. சங்க கால இலக்கியத் தனித் தமிழ்ச் சொற்களை எளிமையிலும் இடையிடையே ஒன்றிரண்டு புகுத்துவது இதன் காரணமேயாகும். எனக்கு இயற்கையின்மீது ஈடுபாடு மிகுதி. இயற்கைக் கவிதை அதிகம் எழுத ஆசைப்படுகிறேன். எழுது கிறேன். என் பாடல் வாயிலாக வாசகர்களை நான் அடிக்கடி சிந்திக்கத் தூண்டுகிறேன். பொதுவாக முறையே படித்தோரும் படிக்காதோரும் சுவைக்க வேண்டும் என்ற குறியோடே நான் எழுதுகிறேன். (கன்றி-தினகரன்.) மூவேந்தர் அச்சகம், @TTಫ್ಕಡ ட்ெ, சென்னை-14