பக்கம்:வானநிதி.djvu/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானநிதி

அத்தியாயம் - 1

வண்ணமாநகரம்—வசந்தருது. மாடமாளிகை கூட கோபுரம் நிறைந்த வண்ணமாநகரம் செல்வம் மல்கியதொரு பட்டினம். பெரிய பெரிய வியாபார சாலைகள் ஒரு சார், பெரிய பெரிய கைத்தொழிற் சாலைகள் ஒருபுடை, பெரிய பெரிய உத்தியோக சாலைகள் ஒருபுறம், பெரிய பெரிய நியாய சபைகள் ஒருபால், பெரிய பெரிய வைத்தியசாலைகள் ஒரு சிறை, பெரிய பெரிய காட்சிச் சாலைகள் ஒருபக்கம் அதன்கண்மேவும். எங்கும் அன்னம் அறாத அறச்சாலைகள், எங்கும் தாபந் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தர்கள், எங்கெங்கும் வான்தொடு சோலைகள், எங்கெங்கும் வற்றாத பொய்கைகள் உள. புகைவண்டித் தொடர்கள் ஓயாது ஓடும், மின்சாரவண்டிகள் தொடர்ந்து தொடர்ந்து செல்லும், மோட்டார் வண்டிகள் இடைவிடாது பறக்கும். இரவிலும் முழுமதிபோலும் மின்சார விளக்குகள் அடிக்கொன்றாகப் பேரொளி செய்தலின், பகல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானநிதி.djvu/2&oldid=1555334" இலிருந்து மீள்விக்கப்பட்டது