பக்கம்:வானநிதி.djvu/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

வானநிதி

போல ஜனவழக்கம் ஒழியாது. மாளிகைகளில் நடந்த விருந்து நடந்தபடியே இருக்கும். கூத்தும் பாட்டும் கேளிக்கையும் விளையாட்டும் களியாட்டும் ஒரு நாளும் நீங்கா. பற்பல நாடகங்களும்,நூதன நூதனமான அத்யற்புதக் காட்சிகளும் ஆங்காங்கு நடைபெறும். இத்தகைய பட்டினத்தின் ஒரு கோடியில் பல நாட்டு மரங்களையுஞ் செடி கொடிகளையும் பக்குவஞ் செய்யப் பாங்காக வண்ண மயிலாடுஞ் வளர்ந்திருக்கும், மாங்குயில் கூவ சிங்காரவன மொன்றுண்டு. அதன் நடுவில் வெள்ளி மலையொத்து விளங்கும் அரண்மனை யொன்றுண்டு. அதன் நாற்புறமும் மின்சார விளக்குகள் எரிந்தன ; பெரிய மரங்களில் பல நிறக் கண்ணாடியுள் சிறிய மின்சார விளக்குகள் அம்மரங்களிற் கனிந்த நவமணிக் கனிகள்போல விளங்கின. இந்திர பவனம் போன்ற அவ்வரண்மனையுள்ளும் பற்பல மின்சாரவிளக்குகளும் பலப்பல மின்சார விசிறிகளும் இருந்தன. சித்திர கூடத்தில் நிலைக்கண்ணாடிகளும், தங்கம் தந்தம் முதலியவற்றற் செய்த பதுமைகளும், விசித்திரமான படங்களும் பார்ப்பவர் கண்களைப் பறித்தன. தங்கப் பூச்சும், பட்டு மெத்தையும் இட்ட நாற்காலிகள் கட்டில்கள் உள்ளிட்டவை தக்க இடங்களில் முறையாக வைக்கப்பட் டிருந்தன. இந்தச் சித்திர கூடத்திற் கடுத்ததோ ரறையுளது. அவ்வறையின் மேற்கட்டும், சுவரும், பாவகமும் மின்சார விளக்கொளியில் நவரத்னமிழைத்தன போன்று தோன்றின. இவ்வறையில் இருவர் பட்டு மெத்தை தைத்த சாய்ப்புநாற்காலியிற் சாய்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர், விருத்தர் ; மற்றொருவர் இடைப்பட்ட வயதினர். இருவரும் ஆழ்ந்த யோசனையி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானநிதி.djvu/3&oldid=1555339" இலிருந்து மீள்விக்கப்பட்டது