பக்கம்:விசிறி வாழை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - விசிறி வாழை,

வேணக்கம்; நான் வருகிறேன்’ என்று விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.

அன்று காகலயில் தினப்பத்திரிகை வந்ததும் பார்வதி அவசர அவசரமாக அதைப் புரட்டினள். பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் வழக்கமாக வரும் ஒரு பகுதியில் அவன் கவனம் சென்றது. அந்தப் பகுதியிலிருந்த செய்தியைக் கண்டதும், அவள் பெரும் வேதனைக்குள்ளாளுள்.

நேற்றிரவு சேதுபதி பம்பாய்க்குப் பயணமாளுர்’ என்பதுதான் அச்செய்தி. ஏற்கெனவே அவள் சேதுபதியைச் சந்தித்து நாலேந்து நாட்களாகியிருந்தன. அந்தப் பிரிவுகூட அவளுக்கு வேதனையைத் தரவில்லை. இப்போது தன்னிடம் கூறிக் கொள்ளாமலே அவர், பம்பாய்க்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார் என்னும் தகவலேத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த உலகமே வெறிச்சென்றாகி விட்டதைப்போல் உணர்ந்தாள். அவர் ஊரிலிருந்தபோது சேதுபதி தன் அருகில் இருந்தது போலவும், இப்போது எல்லாமே தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டது போலவும் உணர்ந்தாள்.

சேதுபதியின்மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. அடுத்தகணம் நான் ஏன் அவரைக் கோபிக்க வேண்டும்? எதற்காக அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு போக வேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? அன்று என்னுடைய சொந்த அண்ணன் என்னைத் தனியாகத் தவிக்கவிட்டுச் சொல்லிக் கொள்ளாமல் போனபோதுகூட எனக்குக் கோபம் வரவில்லையே! இப்போது எனக்குச் சம்பந்தமற்ற யாரோ ஒருவர் தன் சொந்தக் காரியமாகப் பம்பாய் போய்விட்டார் என்பதற்காகக் கோபம் வருவா னேன்?’ பார்வதிக்கு வேதாந்தம் சொன்ன குறள் நினைவுக்கு வந்தது.

‘காணுங்காற் காணேன் றவருய காணுக்காற் காணேன் றவறல்லவை’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/146&oldid=686999" இலிருந்து மீள்விக்கப்பட்டது