பக்கம்:விசிறி வாழை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 விசிறி வாழை

அநாதைபோல் கிடந்தன. அந்தக் காட்சி அவருக்கு வேதனையை அளித்தது. வேதனேகளெல்லாம் ஓர் உருண்டை யாக மாறி நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டதுபோல் ஓர் உணர்ச்சி. அதை விழுங்கி ஜீரணித்துக் கொள்ள முயன்றார் . முடியவில்லை.

ஒரு நிமிஷம் அந்த அறைக்குள் மெளனம் நீடித்தது. அந்த ஒரு நிமிஷத்துக்குள் பார்வதிக்கு இதயமே வெடித்து விடும்போல் தோன்றியது.

வேதனையைச் சகித்துக் கொண்டு மெளனத்தைக் கலத்துக்கொண்டு அவர்தான் பேசினர்.

சோப்பிட்டிர்களா?’’ அந்தக் கேள்வியில் எல்லா வேதனைகளும் அடங்கிக் கிடந்தன.

“உங்கள் கையால் அதை எடுத்துக் கொடுங்கள்’ என்று சொல்லத் துடித்தது அவள் இதயம். ஆனல் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டினுள் பார்வதி. ‘.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/174&oldid=687034" இலிருந்து மீள்விக்கப்பட்டது