பக்கம்:விசிறி வாழை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினெட்டு - 175

போய்விட்டான்...ம்...இதெல்லாம் பழைய கதை...ஹார். விக்ஸ் ஆறிப் போகிறது. சாப்பிடுங்கள்’’ என்றாள் காமாட்சி, ஹார்லிக்ஸை அருத்தியபடியே பார்வதி யோசித்தாள். *அவ்வளவு வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் சேதுபதியைப்பற்றியா நான் தவருக எண்ணிக் கொண் டிருக்கிறேன்? என் அந்தரங்கத்தில் நான் அவர்மீது கொண்டுள்ள அன்பே என் கண்களை மறைத்து அவரும் என்ன நேசிப்பதாக எண்ணத் தூண்டுகிறதோ? எல்லோ ரையும்போல் அவரும் என்னிடம் சாதாரணமாகவே பழகி யிருக்கலாம். நானகவே அவருடைய செய்கைக்கும் பேச் சுக்கும் தவருண நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டு வீண், பிரமை கொள்கிறேன? அவர் சாதாரணமாகத்தான் பழகு கிறார் என்று எண்ணியபோது அவளுக்குப் பெரும் ஆறுதலா யிருந்தது. அடுத்தகணமே, அவர் தன் மீது அன்புசெலுத்த வில்லை என்கிற எண்ணம் அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. காரணம் அவள் உள்ளம் இயற்கையாகவே அவர் அன்புக்கு ஏங்கியிருக்கிறது. இப்போது அவர் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்ததும் அவள் போலியாகச் சந்தோஷப்பட்ட போதிலும் இயற்கையில் அவள் மனம் சொல்லொணுத வேதனையையே அனுபவித்தது. .

ஹார்லிக்ஸுடன் அந்த வேதனையையும் சேர்த்து விழுங்கிய பார்வதி, “...ம்...அப்புறம்?’ என்று கேட்டாள். “அப்புறம் என்ன, அதற்குப் பிறகு நான் அவன் திருமணத்தைப் பற்றியே பேச்செடுப்பதில்&ல், இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் அவனுகவே பேச்செடுத்தான். நான் மறுமணம் செய்து கொண்டால் உலகம் என்ன நினைக்கும் காமாட்சி!’ என்று கேட்டான்.

‘நீங்க என்ன பதில் சொன்னிங்க??? எேன்ன சொல்வேன்? உலகம் சிரிக்கும். இத்தனை வயசு கழித்துக் கல்யாணமாம்!’ என்றேன்

‘அதற்கு அவர் என்ன சொன்ஞர்??? ‘அசடே சுத்தப் பயித்தியமாயிருக்கிருயே நான் விகளயாட்டாகக் கேட்டதை நிஜமாகவே நம்பிவிட்டாயா? என்று கூறி மழுப்பிவிட்டுப் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/179&oldid=687040" இலிருந்து மீள்விக்கப்பட்டது