பக்கம்:விசிறி வாழை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து நான்கு 89

லேவ் ஆன் தி ஹவாய் பிரிட்ஜ்,’ என்றாள் டுலிப். படத்தின் பெயர் கவர்ச்சிகரமாகத்தான் இருந்தது. ஆலுைம் பிரின்ஸிபாலுக்குத் தெரிந்துவிட்டால் என்பதை எண்ணியபோது பாரதிக்குப் பகீர் என்றது. -

எேனக்கு இப்போது ஜாக்ரபி க்ளாஸ் இருக்கு டூலிப்! எக்ஸ்க்யூஸ்மி’ என்றாள் பாரதி.

பேரவாயில்லை; ப்ளீஸ்;...ப்ளிஸ்!’ என்று மன்றாடிய படியே பாரதியின் கரங்களைப் பற்றி இழுத்தாள் டுலிப்.

“அப்படியானல் ஒரு கண்டிஷன், சினிமாவுக்கு நான் தான் டிக்கெட் வாங்குவேன்’ என்றாள் பாரதி.

  • ஓ எஸ்’ என்று ஒப்புக் கொண்டாள் டுலிப். இருவரும் பார்லருக்குச் சென்று ஆளுக்கு இரண்டு கப் ஐஸ்க்ரீமைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அடுத்தாற்போலிருந்த சினிமாத் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். பாரதிதான் டிக்கெட் வாங்கினுள். -

உள்ளே போனபோது ஏர் கண்டிஷன் குளுமையும், ‘கம் ஸெப்டம்பர் கானத்தின் இனிமையும் அவர்களை வர வேற்றன. இருவரும் ஒரு மூலையாகப் போய் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள். மிஸ் டுலிப் மட்டும் உற்சாக மிகுதியில் தன் கால்களால் தரையைத் தட்டித் தாளம் போட்டபடியே, ஐ லவ் திஸ் ஸாங் வெரி மச்!’ என்றாள்.

யாராவது தன் இனக் கவனித்துவிடப் போகிறார்களே என்ற திகிலில் உட்கார்ந்திருந்த பாரதி, எனக்கு ரொம்ப வும் பயமாயிருக்கு டுலிப்” என்றாள்.

‘பயப்படாதே! ஹிச்காக் படம் ைதான் பயப்படனும். மர்டர், மிஸ்டரியெல்லாம் வரும். இது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரியாச்சே!” என்றாள் டுலிப்.

‘சற்று நேரத்துக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டுப் படம் ஆரம்பமாயிற்று. இருவரும் ஆளுக்கொரு சுவிங்கத்தை வாயில் போட்டுச் சுவைத்தபடியே படத்தை ரசிக்கத் தொடங்கினர். நேரம் ஆக ஆகத் தியேட்டரில் நிலவிய இருட்டுக்குள்னேயே ஒரு தெளிவு பிறந்தது. அத்தெளிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/43&oldid=689541" இலிருந்து மீள்விக்கப்பட்டது