பக்கம்:விசிறி வாழை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. விசிறி வாழை

  • அதென்ன புத்தகம் ராஜா?’ எனக் கேட்டாள் பாரதி.

“ஏதோ பிலாஸ்பியாம். கலப்ரரியிலிருந்து வாங்கி வரச் சொல்லியிருந்தாள் அத்தை’ என்று கூறிச் சலிப்புடன் அப்புத்தகத்தை மேஜைமீது போட்டான் ராஜா. பாரதி அதை எடுத்துப் புரட்டினுள்.

“நாம் இருவரும் சினிமா பார்த்துவிட்டு வருகிருேம் என்று தெரிந்தால், எங்க அப்பாவும் உங்க அத்தையும் என்ன செய்வாங்க தெரியுமா???

‘ஏன்ன செய்வாங்க? படம் எப்படி இருக்கிறது என்று கேட்பாங்க! நன்றாயிருக்கிறது என்று சொன்னல் அவங் களும் போய்ப் பார்ப்பாங்க’ என்றான் ராஜா.

‘பார்ப்பாங்க, பார்ப்பாங்க! நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டே துரத்தப் பார்ப்பாங்க..??

‘நீ கவலைப்படாதே! பிரின்ஸிபால் எங்க அத்தை தானே!??

இச்சமயம், சர்வர் வந்து என்ன வேண்டும்?’ என்று விசாரித்தான்.

நீ என்ன சாப்பிடுகிறாய் பாரதி??? “வெறும் காப்பி போதும்.’’ வேறு ஏதாவது சாப்பிட்டேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.’’

‘உங்களுக்கு எது பிடிக்குமோ, அதையே கொண்டு வரச் சொல்லுங்க’’ என்றாள் பாரதி, *

‘எனக்கா? எனக்குப் பிடிக்காதது இந்த உலகத்திலே ஒண்ணே ஒண்ணுதான்’ என்றான் ராஜா.

“என்ன அது?’’ ‘பயித்தியம்தான் பிடிக்காது’ என்றான் அவன். டம்ளரிலிருந்த தண்ணிரைக் குடிக்க இருந்த பாரதி பகீரெனச் சிரித்துவிட்டாள். -

    • நல்ல வேளை இந்த ஜோ'க்கை நீ தண்ணிர் குடிக்கும்போது சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!’ என்றான் ராஜா. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/46&oldid=689544" இலிருந்து மீள்விக்கப்பட்டது