பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

குறைந்த அளவு அகலம் 1.22 மீட்டர் அல்லது 4 அடி அதிக அளவு அகலம் 1.25 மீட்ட அல்லது 4½ அடி. அளவினைக் காட்டும் ஒவ்வொரு கோடும் 5 செ.மீ. அல்லது 2 அங்குலம் அகலமுள்ள சுண்ணாம்புக் கோட்டினால் போடப்பட்டிருக்க வேண்டும்.

33. வட்ட குறிப்பாளர்கள் (Lap Scorers)

800 மீட்டர் 1500 மீட்டர் மற்றும் நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கெடுத்துக் கொள்கின்ற ஓட்டக்காரர்கள் பலரது. ஓடும் தூரத்தின் வட்டங்கள் (Rounds) எத்தனை என்பதைக் கணக்கெடுத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் இன்னும் எத்தனை வட்டம் ஓட வேண்டும் என்பதைக் கூறிக் கொண்டே வந்து. கடைசி வட்டத்திற்கு அவர்களுக்கு மணி அல்லது விசில் மூலமாக சைகை செய்து கூறுவது வட்டக் குறிப்பாளர்களின் கடமையாகும். ஒரு வட்டக் குறிப்பாளர்சி 4 ஓட்டக்கார்களைக் கண்காணிக்கலாம். அதற்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது.

34.நீளத்தாண்டல் [Long Jump]

இப்பொழுது இது அகலத் தாண்டல் எனும் பொருளில் Broad Jump என்று அழைக்கப்படுகிறது.

நீளத் தாண்டலுக்கு ஓடி வரும் பாதையின் நீளம் குறைந்தது 130 அடியிலிருந்து 147.6 அங்குலம் வரை இருக்க வேண்டும் . ஒரு உடலாளருக்கு 6 முறை தாண்டும் வாய்ப்புத் தரப்படுகிறது. தாண்ட உதவும் பலகையின் நீளம் 4 அடி அகலம் 8 அங்குலம். தாண்டிக் குதிக்கின்ற மணற்பரப்பின் அகலம் 9 அடி பலகையிலிருந்து அதன் நீளம் பகுதி 32 அடி 10 அங்குலம் இருக்க வேண்டும். தாண்டிக் குதித்தவரது உடலின் எந்தப் பாகம் பலகையில் உள்ள ஈர மணலுக்கு மிகக் குறைந்த தூரத்தில் உள்ளதோ, அதுவே,