பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
113


வெறி நாயைப் பார்ப்பதுபோல இருந்தது அவரது பார்வை. கூனிக் குறுகி நின்றான் வேணு, மார்லண்டே என்ன பேசுவது என்றே புரியாமல், ஒ விதமான மயக்க மான குழப்ப நிலையில் நின்று கொண்டிருந்தார்,

தள்ளாடித் தள்ளாடிப் போய்க் கொண்டிருந்தான் வேணு. இந்திய நாட்டு விளையாட்டுத்துறை இப்படிப்பட்ட வர்களால்தான் தள்ளாடித் தள்ளாடி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நேரிடையாகக் கண்டு கொண்ட குணசேகர், தலையைப் பிடித்துக் கொண்டார்.

அவரது கால்கள் நடுங்குவது போல உணர்ந்தார். கண்கள் தீயாக எரிந்து கொண்டிருந்தன. தலையில் இடி இடிப்பதுபோல வலிகுரத்துக் கொண்டிருந்தது. இலேசாக உடலில் நடுக்கம்.

அவரது நிலையை உணர்ந்த மாலண்டோ அவரின் அருகில் சென்றார். அவரது தோளில் தன் இடது கையைப் போட்டு 'பிளிஸ் என் காருக்கு அழைத்துப் போங்கள்' என்றார் குணசேகர்.

காருக்குள் பின்சீட்டில் உட்காரச் சென்றவர், அப்படியே படுத்துவிட்டார்.

என்ன செய்வது என்றுபுரியாமல், முன் சீட்டில் அமர்ந்து கொண்டு, "டிரைவர்.சீக்கிரமாக வீட்டுக்குப் போ! ஐயாவுக்கு காய்ச்சல் மாதிரி இருக்குது.சீக்கிரம்...என்றார்.

டிரைவர் பயந்தபடி, காரை வேகமாக ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டு போனார்.

மார்லண்டோ பயந்தபடி, அது காய்ச்சல்தான். முதலில் சாதாரண காய்ச்சல் மாதிரி இருந்தது.