பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

19



இக்கல்லூரியின் ஆண்டு மலரைப் பார்க்க நேரிட்டபோது எனக்கே புல்லரித்து விட்டது. காரணம் எல்லாப் பாடங்களிலும் 100 சதவிகிதம் என்று பள்ளிக் கல்லூரி மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதைப் பார்த்தேன். எப்படிப்பட்ட தேர்ச்சி என்றால் மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்ற விதம் பாராட்டிற்குரியது. அந்தப் பாராட்டைப் பெறும் நீங்கள் மேன்மேலும் கொள்கைகளை வகுத்துக் கொண்டு முயற்சி செய்து முன்னேறும் எண்ணத்தினைக் கொள்ள வேண்டும்.


வள்ளுவர் கூறியது போல.
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் — தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பதற்கேற்ப வள்ளியம்மாள் அறக்கட்டளையைத் தம்முடைய தாயின் பெயரால் தொடங்கி, அதில் பயிலும் நீங்கள்நல்ல தேர்ச்சி அடைந்தது பார்த்து மகிழ்தற்குரிய நிலையில் இக்கல்வி நிலையம் விளங்குகிறது. இதற்கு உங்கள் ஒத்துழைப்பு மேலும் தேவைப்படுகிறது.

முதலமைச்சராக இருந்த புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் அவர்கள், மூகாம்பிகை வடிவிலே தன்னுடைய தாயைக் கண்டதாக அவரே சொல்லியிருக்கின்றார். எப்போதும் தன் வீட்டிற்கு வெளியே தன் தாயின் திருவுருவத்தை வைத்துள்ள அவர், ஒரு காரியத்தைத் தொடங்கும்போது தன்னுடைய தாயை வணங்கிய பின்பே தொடங்குவார். தெய்வமாகக் கருதுகின்ற தன்மை கொண்டவர்கள் பெண்கள். பெண்கள் என்றால் இயற்கையிலேயே ஆற்றல் உடையவர்கள், பெண் இல்லையென்றால் பாசம் ஏது, அன்பு ஏது, இல்லம் ஏது? குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்த்து வைப்பவர்கள் பெண்கள் தாம், மக்கள், மகள் என்ற நிலையிலும் கூட, தன்