பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பாலபெரியவர் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் வாழ்த்துரை (10-3-93)



'ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு'

கல்வி—வித்தை—உயர்ந்த செல்வம்; திருடப்படாத செல்வம்; சாஸ்வதமான செல்வம்; கொடுக்கக் கொடுக்க குறையாத செல்வம். நல்ல வழியினை வகுத்துக் கொள்ள கல்வியைக் கற்கிறோம். அக்கல்வியினாலே திறமையும் நல்ல எண்ணமும் வளர வேண்டும். இந்த உலகத்திற்கான கல்வி—ஞான உலகத்திற்கான கல்வி என இருவிதக் கல்வியினைக் கூறுகிறார்கள். இவ்வளவு படித்தும் இப்படிச் செய்கிறார்களே?' என்பர். இதிலிருந்து கல்வி நல்ல எண்ணங்களை வளர்ப்பது என்பது தெரிகிறது. கல்வியில்லாது பணம் இருந்தால் மற்றவரை அடிமைப்படுத்துவர். பண்பில்லாது, கல்வி இருந்தால் எதற்கெடுத்தாலும் விவாதம் செய்வர். சரீரத்தில் பலம் இருந்தால் மற்றவரை இம்சிப்பார்கள். ஆனால் பணமும், படிப்பும், பலமும் நல்ல சிந்தனை உடையவர்களிடத்து இருந்தால் நலமுண்டாகும். கல்வி உடையவர்களிடத்து இவை மூன்றும் நல்ல பயன்தரும். கல்வியோடு பக்தியும், நல்ல எண்ணமும் வளர்க்கும். கல்வியோடு பக்தியும், நல்ல எண்ணமும் வளர்க்கும் விதத்தில் நாம் செயல்பட வேண்டும். ஆதிசங்கரர் கல்வி பற்றி மூன்று கருத்துக்களைத் தருகிறார். அவை,


1. நல்ல படிப்பு படிக்க,
2. நல்ல ஆரோக்கியம் பெற,
3. பொருளை நல்லவர்களுக்குத் தர

என்பதாகும், நாம் வாழும் தேசம் பண்புள்ள தேசம். மெகஸ்தனீஸ் தம் நூலுள் இதை 'நல்ல படிப்புள்ளவர்கள் வாழும் தேசம்' எனக் கூறுகிறார், பிரசித்தி—பெருமை