பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

41


களைத் தொகுத்து, சிறந்த முறையில் வெள்ளிவிழா மலரை இங்கு வெளியிட்டிருக்கிறார்கள். இதை உற்று நோக்கும் போது இவர்களின் உழைப்பும், மேன்மையும் நன்கு புலப்படுகின்றன.

135 ஆண்டுக் காலமாக நடந்து வரும் பல்கலைக் கழகத்தில் கூட இத்தகைய சிறந்த பெருங்கூடம் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு சிறந்த வெள்ளிவிழா மண்டபத்தை மாணவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அமைத்திருப்பதைப் பார்க்கும்பொழுது ஐயா அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த வள்ளியம்மாள் கல்வி அறம் எல்லாவிதமான வசதிகளையும் கொண்டதாக இருப்பதை நோக்கும்போது என் வாழ்க்கையின் ஒரு செய்தி தான் நினைவிற்கு வருகிறது.

50 ஆண்டுகளுக்கு முன் பாளையங்கோட்டையில் நான் கற்கப் பள்ளிக்கூடம் செல்வதற்குப் பல இடர்ப்பாடுகளை அனுபவித்தவன். பள்ளிக்கூடம் வெகுதூரத்தில் இருக்கும். பேருந்து வசதி கிடையாது. நடந்தேதான் சென்று படிக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலும் சாதாரண வசதிகள் என்பதுகூடக் கிடையாது. இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நீங்கள் அனைவரும் எத்தகைய அதிர்ஷ்டசாலிகள் என்பது புலப்படும். எல்லாவிதமான வசதிகளையும் கொண்டது இவ் வள்ளியம்மாள் கல்வி அறம். நடந்தே சென்று படித்து வரலாம். நடந்தாலும் அதிக தூரமில்லை. இத்தகைய சிறந்த வசதிகளைக் கொண்டது இவ் வள்ளியம்மாள் கல்வி அறம் என்றால் மிகையாகாது.

முன்பெல்லாம் பொறியியல் துறை படிக்க வேண்டும் என்றால் 450 கிலோ மீட்டர் கடந்து சிதம்பரம் சென்று படிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று இந்நிலை மாறியுள்ளது. உங்கள் குடியிருப்பின் அருகேயே