பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

81


உண்டாகும்.அறிஞர்கள் பேசுகிற பேச்சிலே அழகு இருக்கும். இனிமை இருக்கும். இதற்கு ஓர் உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். ஓர் அரசனுக்கு நீண்டகாலம் கழித்து அவன் குலத்தை வளர்க்க குழந்தையொன்று பிறந்தது. அந்த அரசகுமாரனுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதை மிக நயமான முறையில், “குழந்தையைக் காட்டிலும் தங்களுக்கு ஆயுள் அதிகம்” என்று உரைத்தான். உலகத்தில் எல்லாரும் விரும்புவது சுகம். துக்கத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். எங்கே அறிவு ஒளி வீசுகின்றதோ அங்கே சுகம் விளைகின்றது. வைரத்திற்குள் எப்படி ஒளி வீசுகிறதோ அதேபோல் அறிவு ஒளி விடுகின்றது. இதே கருத்தை,

“அகரமுதலென உரைத்து என்பதொரு அக்கரம்
அகில கலைகள் எதிலும் கொண்ட தத்துவம்
அபரிமித புழுதியின் அடங்கும் தனிப்பொருளை
எப்பொருமாய அறிவை அறிபவரறியும் இன்பம்தனை

என்று அருணகிரிநாதர் உரைத்துள்ளார். அறிவினாலே இன்பம் உண்டாகும். ஞானிகள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள். அப்பர்,

“ஏமாப்போம் பிணியறியோம்; பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”


என்று கூறினார். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் கருத்தும் இதையே சுட்டிக் காட்டுகிறது . மாற்றாந் தாயான கைகேயி இராமனிடத்தில் 'பரதன் நாட்டை ஆள, நீ கானகம் செல்ல வேண்டும்' என்று கூறிய போது, அவனுடைய திருமுகம் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதாக அமைந்திருந்தது என்று கம்பர் அழகுற விளக்குகிறார். ஞானிகள் கானகம் செல்வதற்கு வருந்துவது கிடையாது. இராமன் ஞானியாக இங்கு விளங்குகிறான். சுகத்தையும், துக்கத்தையும், இலாபத்தையும், நஷ்டத்தை-வ—5