பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கொண்டிருந்த வாதாபிக்கு நாம் போக வேண்டாமா? அன்று நரசிம்மவர்மனோடோ இல்லை பரஞ்சோதி யோடோ நாம் போகவில்லை. அப்படிப் போயிருந்தாலும் போர்ப்படை வீரராகத்தான் சென்றிருப்போம். இன்றோ நாம் கலைத்துதுவராக அந்த வாதாபிக்கே செல்லலாம். ஆம், அந்த வாதாபிக்கே செல்கிறோம் நாம் இன்று. முன்னரே ஹம்பி செல்ல ஹாஸ்பெட் வரை போயிருக் கின்றோம். அங்கிருந்து கடக் போய் அ ங் கி ரு ந் து ஜோலாபூர் செல்லும் பாதையில் ரயில்மாறி பாதாமி என்னும் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். அது என்ன பாதாமி என்கிறீர்களா? அந்தப் ப ைழ ய வாதாபி தான் இன்று பா தா மி என்று திரிந்திருக்கிறது. இது ரயிலில் செல்லும் வழி. ரோடு வழியே போக வேண்டுமென்றால் ஹாஸ்பெட்டிலிருந்து கடக் போய் அங்கிருந்து பாதாமி செல்லலாம். அந்த வழியில் ரோடுகள் சரியாக இல்லை. இடையில் வரும் ஆற்றைக் கடக்க பாலமும் இல்லை. ஆதலால் ஹாஸ்பெட்டிலிருந்து வடக்கு நோக்கி பாகல்கோட் வரை போய் பின்னர் தெற்கு நோக்கி பாதாமி வரவேண்டும். இப்படிச் செல்லுவது சுற்றி வளைத்து செல்வதுதான் என்றாலும் இதுவே வசதியான வழி. பாதாமி செல்ல பஸ் வசதிகள் எல்லாம் இருக்கின்றன. சொந்தக் காராகயிருந்தால் மிக்க வசதியோடு செல்லலாம். ஊரை அடுத்து மலைச் சிகரங்கள் இருக்கின்றன. இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு பெரிய குளம் இருக் கிறது, அதை அகஸ்தியர் குண்டம் என்கின்றனர். அடடே, இந்தத் தமிழ் முனிவர் அகஸ்தியர் அந்த நரசிம்மனையும் பரஞ்சோதியையும் ஏன்நம்மையும் முந்திக் கொண்டு இங்கு வந்து இடம் பிடித்திருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றும். அவரைப்பற்றி விசாரித்தால் இந்த ஊருக்கு வாதாபி என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் தெரியும். பண்டைய நாளிலே தாரகாசுரன் என்று ஒரு