பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். என்றும் பாடியிருக்கிறார். ஆனால் இவனுக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே கலைப் பொருட்களை விட கலைஞர்களையே பரிவர்த்தனை செய்வதன் மூலம் தான் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று எண்ணியிருக்கிறார்கள், நம்நாட்டில் கலை வளர்த்த காவலர்கள். அந்த வரிசையில் வருகிறவர்கள் தான் சாளுக்கிய மன்னர்கள். பாதாமி சாளுக்கிய மன்னர்களது காலம் இந்திய வர லாற்றிலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் அந்த வாதாபிக்குப் போயிருக்கும் போதே தெரிந்திருக்கிறோம். விந்திய மலைக்குத் தெற்கே ஆண்ட மூன்று பெரிய வல்லரசு களில் சாளுக்கியப் பேரரசும் ஒன்று என்பதை சரித்திரம் படித்தவர்கள் அறிவார்கள் பிரிதிவி வல்லபன், பரமேஸ்வரன் என்ற பட்டங்களை இச்சாளுக்கிய மன்னர்கள் சூடிக்கொள்வதிலிருந்தே அவர்கள் வீரம், பராக்கிரமம் எல்லாம் அறிதல் கூடும். இந்த சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் சமண சமயம் சிறப்புற்று விளங்கி வந்திருக்கிறது. என்றாலும், சைவத்தையும் வைணவத்தை யும் அவர்கள் வெறுக்கவில்லை. சமணக் கோயில்களை உரு வாக்குவதில் காட்டிய சிரத்தையையே சைவக் கோயில் தளைக் கட்டுவதிலும் காட்டியிருக்கிறார்கள். இந்த சாளுக் கியர் காலத்தில்தான் கலைமூலமாக வடக்கும், தெற்கும், யாதொரு பிணக்கமும் இல்லாமல் இணைந்திருக்கிறது. சாளுக்கிய மன்னர்களில் ஒருவனான இரண்டாம் விக்ர மாதித்தன் 733-முதல் 745-வரை பாதாமியை தலை நகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறான். அவனே அன்று காஞ்சியிலிருந்த பல்லவர்கள் மேல் படையெடுத்து தலை நகர் திரும்பிய மன்னன் காஞ்சியிலிருந்து குண்டன் என்னும் ஒரு பிரபல சிற்பியையும் உடன் அழைத்துச் சென்றிருக்