பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 முறைவைப்பைச் செய்திருக்கிறார்கள்.அந்த முறைவைப்பை மாற்ற நாம் யார்? என்றேன். அப்பாடா, எவ்வளவோ காலமாக இருக்கும் முறை வைப்பை மாற்றாது பழைய படியே இருக்கும்படி செய்த என்னை அர்ச்சகர்களும், தரும கருத்தரும் வாழ்த்தினார்கள். - . . . இந்த சம்பவம் நான் அந்தப் பழைய சாளுக்கிய சாம் ராஜ்யத்தில் பிரபல நகரமாக இருந்த ஐஹோளே என்ற ஊருக்குப்போகும் போது என் ஞாபகத்திற்கு வந்தது. ஆம் பாதாமி சாளுக்கியர் என்னும் அந்த முந்தைய சாளுக்கிய மன்னர்கள், பாதாமி, பட்டடக்கல், ஐஹோளேயிலிருந்து அரசு புரிந்திருக்கிறார்கள் என்று சரித்திரத்தில் படித்திருக் கிறேன். இவற்றில் பாதாமிக்கும் பட்டடக்கல்லுக்கும் போய் அங்குள்ள கலைக்கோயில்களை, சிற்பவடிவங்களை எல்லாம் கண்டு விட்டோம். ஐஹோளே இவற்றிற்கெல் லாம் பிந்தியதாகத் தானே இருக்கும். அதைப் பார்க்க வேண்டியது அவசியம்தானா என்று கூட எண்ணினேன். ஆனால் இதைப் பற்றி விசாரித்தால் காலத்தால் ஐஹோளே பாதாமிக்கும் முந்தியது மாத்திரம் அல்ல சீலமிக்க சிறப்பால் கூட அது முன்னணியில் நிற்கக் கூடியதே என்று தெரிந்து கொண்டேன். அதனால்தான் செல்லும்வழி கொஞ்சம் சிரமம் என்றாலும் ஐஹோளே என்னும் ஊருக்கும் உங்களை இழுத்தடிக்கிறேன். சிரமம் கருதாது என் பின் வரவும் வேண்டிக் கொள்கிறேன். நமது இந்திய நாட்டின் வடபகுதியிலும் மத்திய பகுதி யிலும் கி. பி. 320-முதல் 530-வரை குப்தர்கள் இருந்து அரசாண்டு வந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் பல கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே காலத்தில் தென்னாட்டிலும் நல்ல கலைக் கோயில்களை அமைத்த பெருமையை இந்த சாளுக்கிய மன்னர்கள் தட்டிக் கொண்டு போகிறார்கள். ஆம் மாமல்லபுரத்தை உரு 2738–10