பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கிறது. பண்டரிபுரத்திற்கு பக்கத்திலே மங்கல்பேடே என்னும் ஒரு சிறிய ஊர், அங்கே கானுபத்ரா என்று ஒரு பெண். நல்ல அழகுவாய்ந்தவள். அவள் பாண்டுரங்கனிடம் அத்யந்த பக்தி உடையவள். அந்த வட்டாரத்தை ஆண்டு வந்த மகம்மதிய அரசன் ஒருவன் அவள் அழகைக் கண்டு மோகிக்கிறான். தன் சேவகர்களை அனுப்பி அவளை அழைத்து வரச் சொல்கிறான். அவன் ஆணைக்குப் பயந் தாலும், கானுபத்ரா பாண்டுரங்கனைத் தரிசித்து விட்டு வந்து விடுவதாகச் சொல்கிறாள். அப்படியே பாண்டுரங்கன் சந்நிதி வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டிக் கொள் கிறாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளை போல், ஊனிடை ஆரி கங்கு உத்தமர்க்கென்று உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் என்றே விண்ணப்பித்திக் கொள்கிறாள். பாண்ரங்கனும், அவளது காதலை ஏற்று தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள் கிறான். அவள் பூத உடல் மறைந்த இடத்திலே தான் இந்த மரம் தோன்றி வளர்ந்திருக்கிறது. அந்தப் பக்கத்து வாயிலையும் கானுபத்ரா வாயில் என்றே அழைக்கின்றனர். இன்னும் இந்தத் தாட்டி மரத்திற்குப் பக்கத்திலேயே வேங்கடாசலபதியிள் சந்நிதி ஒன்றும் இருக்கிறது. இந்த சந்நிதிக்கு சற்று மேற்கே மகாலக்ஷமியின் கோயிலும் அதற் குப் பின்புறத்தில் ராமேஸ்வரர் சந்நிதியும் இருக்கின்றன. பாண்டுரங்கன் கோயிலில் வடக்குப் பிரகாரத்தில் ருக்மணிக்கென்று ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இதனை அடுத்தே சத்யபாமைக்கும் ஒரு சந்நிதி. சத்தியபாமையை ராஹி அம்மை என்று அழைக்கின்றனர், மராத்திய மக்கள்.