பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 இந்த ருக்மணி கோயிலுக்கு எதிரில்தான் சுவர்ண பிம்பன் என்ற பெயரோடு ஒரு பெரிய அரசமரம் இருக்கிறது. இதனை ஒட்டிய பிரகாரத்தில் ஆறு அறைகள். ஒவ் வொன்றிலும் ஒரு மூர்த்தி. காசிவிஸ்வநாதர், ராம லக்ஷ்மணர் காலபைரவர் முதலியோர் இருக்கின்றனர். இந்த சந்நிதிக்கு எதிரில் உள்ள சுவரில் .ெ ச ள ர் யா அய்ன்சி' என்னும் தேவியின் சிலை ஒன்றிருக்கிறது. செளர் யா அ ப் ன் சி என்றால் ம ர த் தி ய மொழியில் எண்பத்தி நான்கு என்று பொருளாம். அச்சிலையின் பேரில் மராத்திய மக்கள் தங்கள் முதுகைத் தேய்க்கின்றனர். அப்படித் தேய்ப்பவர்கள் எண்பத்து நான்கு ஆயிரம் ஜன்மங்களில் முக்தி அடைகின்றனராம். ஆனால் ஒன்று நாம்தான் இந்தப் பிறவியிலேயே முக்தி பெற விழைகின்றவர்கள் ஆயிற்றே. எண்பத்து நான்கு ஆயிரம் பிறவி எடுத்து முடிவதற்குள் முக்தி பெறு. வதிலேயே வெறுப்புத் தோன்றி விடுமே! ஆதலால் நாம் முதுகைத் தேய்க்காமலேயே திரும்பி விடலாம். இப்படி கோயில் முழுவதையும் சுற்றிய பின் திரும்பவும் பதினாறு கால்மண்டபம் வந்து. அங்கு வைத்திருக்கும் பாண்டுரங்கனின் பாதுகைகளையும் தரிசித்துவிட்டு வெளியே வரலாம். இந்தப் பண்டரிபுரத்தில் இந்தப் பாண்டுரங்கன் கோயிலைத் தவிர இன்னும் பல கோயில்கள் உண்டு. அவைகளில் மூன்று முக்கியமானவை. அதில் ஒன்று மல்லிகார்ச்சுனர் கோயில். இது பாண்டுரங்கன் கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் இருக்கிறது. சிவபெருமான்தான் லிங்க வடிவினராக மல்லிகார்ச்சுனர் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். பாண்டு ரங்கபக்தரான நாமதேவர் இவர் கோயில் வாசலில் வந்து பாண்டுரங்க பஜனை செய்திருக்கிறார். இக்கோயிலை நிர்வகித்த சிவாச்சாரியார்கள் நாமதேவரை விரட்டியிருக் கின்றனர். அவர் கோயிலுக்கு மேல்புறம் சென்று பஜனையைத் தொடர்ந்திருக்கிருர், நாமதேவர் பாடலைக்